Tuesday, May 21

போராட்டம் நடக்கிறதா என அரசிற்கு சந்தேகம்! அமோக வெற்றி - தொழிற்சங்கங்கள்

போராட்டம் நடக்கிறதா என அரசிற்கு சந்தேகம்! அமோக வெற்றி - தொழிற்சங்கங்கள்

May 21, 2013  02:28 pm
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் எதிர்க் கட்சி தொழிற் சங்கங்கள் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

900 தொழிற்சங்ககங்கள் மற்றும் 15 அரசியல் கட்சிகள் இந்த பகிஸ்கரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பதாக தொழிற்சங்கங்களை ஒன்றிணைக்கும் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பாடசாலை மற்றும் தனியார் நிறுவனங்களில் வழமை நிலை காணப்படவில்லை என தொழிற்சங்கங்களை ஒன்றிணைக்கும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.வி. லால்காந் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் காலை தொடக்கம் 12 மணி வரைக்கும், பேராதனை பல்கலைக்கலகத்தின் பொருளியல் பீடங்களை தவிர ஏனைய அனைத்து பீடங்களும் ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மருத்துவ பிடத்தை தவிர ஏனைய அனைத்து பீடங்களும் மூடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை அநுராதபுரத்திலுள்ள சகல பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. நகரின் கடைகள் 90 வீதம் மூடப்பட்டுள்ளன. சிலாபத்தில் 85 வீதமான கடைகள் மூடப்பட்டுள்ளன. கொழும்பில் பல தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டு பணி பகிஸ்கரிப்பிற்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

போராட்டத்தை தோல்வியடையச் செய்ய அரசாங்கம் பல சுற்ரறிக்கைகளை விட்டு விடுமுறை ரத்து செய்யப்பட்ட அனைவரும் வேலைக்கு வர வேண்டும் என விலியுறுத்தியிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

சுகாதார சேவையில் பல நிறுவனங்கள் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியமையின் காரணமாக வைத்தியசாலை பணிகள் தடைப்பட்டதாக கே.வி. லால்காந் கூறினார்.

எனினும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நடவடிக்கைகள் வழமைபோல் இடம்பெற்று வருவதாக அணில் ஜெயசிங்க தெரிவித்தார்.

பணி பகிஸ்கரிப்பு போராட்டம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்ட போதும் அவ்வாறான ஒன்றை காண முடியவில்லை என வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்தவர்கள் குறிப்பிட்டனர்.

எனினும் நுவரெலிய மாவட்டத்தின் வட்டவல வைத்தியசாலையின் பணிகள் தடைப்பட்டிருப்பதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.

காலி மாவட்டத்தில் அரச நிறுவனங்களின் பணிகள் வழமைபோல் இடம்பெறுவதாக எமது காலி மாவட்ட செய்தியாளர் தெரிவித்தார். மேலும் அந்த மாவட்டத்தில் விடுமுறை அறிவித்த ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

அநுராதபுரத்திலும் பாடசாலைகளின் நடவடிக்கைகள் மந்த கதியில் இருந்ததோடு, இம்மாவட்ட வர்த்தகர்கள் இரண்டு மணித்தியாலம் கடைகளை மூடி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதேவேளை அரச உத்தியோகத்தர்கள் வழமை போன்று கடமைக்கு திரும்பியுள்ளதாகவும் பகிஸ்கரிப்பு நடவடிக்கை இடம்பெறுவதாக தெரியவில்லை எனவும் அரசாங்க நிர்வாக அமைச்சின் செயலாளர் பீ.வி. அபயகோன் தெரிவித்தார்.

இந்நிலையில் 93.5 வீதமான அரச சேவையாளர்கள் இன்று பணிக்கு திரும்பியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment