உயர்நீதிமன்றத்தினால்
வழங்கப்பட்ட தீர்ப்பின் பிரகாரமே மின்சார கட்டணங்களில் அதிகரிப்புகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்தில் இன்று
செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
மின்சார கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் 2008 ஆம் ஆண்டு வழக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையிலேயே இந்த அதிகரிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.
சட்டமா அதிபரின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி நெரின் புள்ளேயே இவ்வாறு நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
புதிய மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனு உயர்நீதிமன்றத்தினால் இன்று ஆராயப்பட்டது.
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், நீதியரசர்களான சந்தியா ஹெட்டிகே மற்றும் பி.ஏ.ரத்னாயக்க ஆகியோரின் முன்னிலையிலே இந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனு ஆராயப்பட்டது.
இந்த மனு உயர்நீமன்றத்தில் ஆராயப்பட்டபோது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி நெரின் புள்ளே, மின்சார சபை சட்டமூலம் திருத்தப்பட்டதன் பின்னர் மின்கட்டணங்களை திருத்துவதற்கான முழுமையான அதிகாரம் பொதுமக்கள் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கே இருக்கின்றது என்று சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து இந்த அடிப்படை உரிமைமீறல் மனுமீதான விசாரணை யூன் மாதம் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

No comments:
Post a Comment