முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில் வட மாகாண சபைத்
தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணக்கப்பாட்டுடன் உரிய கட்சிகளுடன்
இணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் வன்னி
மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பு நேற்றிரவு மு.கா.வின் தலைவரும்
நிதியமைச்சருமான ரவூப் ஹக்கீமின் தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்றது.
அச் சந்திப்பிலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டது.
இச் சந்திப்பில் மு.கா.வின் செயலாளர் நாயகம் ஹஸனலி எம்.பி., மு.கா.வின்
பிரதித் தலைவர் ஹாபிஸ் நஸீர், பாரூக் முத்தலிப்பாவா எம்.பி., பைஸல் காசிம்
எம்.பி. உட்பட கட்சியின் வன்னி மாவட்ட உயர்பீட உறுப்பினர்கள், மக்கள்
பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பில், இன்று மு.கா. அரசின் பங்காளிக் கட்சியாக ஆட்சியில்
இருந்தபோதும் மு.கா. ஆதரவாளர்கள் புறந்தள்ளப்படுகின்றனர். இந்நிலையினை
இன்னும் தொடர விடக் கூடாதென மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
எனவே, நடைபெறவிருக்கும் வட மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம்களின் நலனை
முன்னிப்படுத்தி முஸ்லிம் வாக்குகள் சிதறடிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக
மு.கா. உரிய தரப்பினருடன் இணக்கப்பாட்நோடு இணைந்து போட்டியிடுவதற்குத்
தயார் என முடிவெடுக்கப்பட்டது. மேலும், இணக்கப்பாட்டை எட்டுவதற்கு மு.கா.
எந்தவொரு விட்டுக்கொடுப்பையும் செய்யத் தயார் எனவும்
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment