அரசாங்கம் வட மாகாண சபையை திரிபுபடுத்த புதிய சட்டமூலம் ஒன்றை நீதியமைச்சர்
ரவூப் ஹக்கீம் மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதென தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன்
தெரிவித்தார்.
கொழும்பு பான்ஸ் பிளேஸில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அதிகாரத்தை பகிர்ந்து
நாட்டை கட்டியெழுப்பும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர்
மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து வேறு பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் தாம்
தற்போது வசிக்கும் பிரதேசங்களில் இருந்து கொண்டே வாக்களிப்பதற்கு அரசாங்கம்
ஒரு யோசனையை முன் வைத்துள்ளது. இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
அதரிக்கும்.
இந்நிலையில் தேர்தல் இடாப்பில் பெயர் பதியப்படாதிருந்தாலும் 1983 ஆம்
ஆண்டுக்கு முதல் அவர்கள் வடக்கில் வசித்திருந்தால் அவர்கள் வாக்களிக்க
முடியும் என்றதொரு சட்டமூலத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் நீதியமைச்சர்
ரவூப் ஹக்கீம் ஊடாக சமர்ப்பிக்கவுள்ளது.
No comments:
Post a Comment