யுத்தம் நிறைவடைந்து நான்கு கடந்துள்ள போதிலும் சரியான தரவுகளை
உள்ளடக்கிய கணக்கெடுப்பொன்று மேற்கொள்ளப்படவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரசின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்தார்.
இது தொடர்பில் விடிவெள்ளியிடம் கருத்து தெரிவித்த அவர்,
யுத்தமொன்று நிறைவடையும் பட்சத்தில் குறித்த நாடு யுத்த காலத்தில்
சந்தித்த சேதவிபரங்கள், இழப்புகள் உள்ளிட்ட அனைத்தையும்
கணக்கெடுப்பொன்றின் மூலம் அறிய வேண்டும். அப்போதே யுத்தத்துக்கு பின்னரான
அபிவிருத்திகள் சாத்தியமாகும்.
இது வரை அரசு சரியான கணக்கெடுப்பொன்றினை நடத்தவில்லை. அதனை அரசு உடனடியாக செய்யவேண்டும் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment