யாழ். குடா நாட்டில் உள்ள அநேக இராணுவ முகாம்கள் பலாலிக்கு கொண்டு செல்லப்படும் என்று இராணுவ தளபதி லெப்டினண்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்து உள்ளார்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக மூன்று இராணுவ முகாம்கள் மாத்திரம் யாழ். குடா நாட்டில் இருக்கும், ஏனையவை பலாலி இராணுவ தளத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றார்.
இவர் தெற்கு நெடுஞ்சாலையில் இராணுவத்தினரால் நடத்தப்படுகின்ற உணவு விடுதி ஒன்றை சம்பிரதாயபூர்வமாக நேற்று காலை திறந்து வைத்தபோதே இவ்விதம் பேசினார்.
No comments:
Post a Comment