மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் ரோஹண விஜயவீரவின் மகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது தாய் மற்றும் சகோதரனை தாக்கியதாக
பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்தே இவர் நேற்றிரவு கைது
செய்யப்பட்டதாக பொலிஸார் அறிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் ரோஹண விஜயவீரவின்
மூத்த மகள் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் புத்திக சிறிவர்தன
தெரிவித்தார். மறைந்த ரோஹன விஜயவீரவின் மனைவி செய்த முறைப்பாட்டையடுத்தே
மகள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட அவரை வத்தளை நீதவான்
நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை ஆஜர்படுத்திய போது அவரை யூன் 3 ஆம்
திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நன்றி: தமிழ்மிரர்
No comments:
Post a Comment