இலங்கையில்
பியர் அருந்துவோர் தொகை அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இதனால் இலங்கையில் பியர் நுகர்வோரின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக
இங்குள்ள பியர் தயாரிக்கும் பெரிய நிறுவனமான லயன் பியர் நிறுவனம் பியரினைக்
கலன்களில் அடைக்கும் தம்பணியினை விரிவு படுத்த ஆரம்பித்திருப்பதாக
கூறுகிறது.
கடந்த வருடம் இங்கு நிலவும் பியர்
தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இந்தியா, வியட்நாம் ஆகிய நாடுகளிலிருந்து
பெருந்தொகையான கார்ல்ஸ்பர்க் ரக பியர் கலன்கள் இறக்குமதி
செய்யப்பட்டிருக்கின்றன. இதனால் மேற்படி லயன் நிறுவனத்திற்கு அதன்
வருமானத்தில் 17 வீதம் அளவில் இழக்க நேரிட்டு 2012ஆம் வருடம் நிகர இலாபமாக
1.0 பில்லியன் ரூபாவையே ஈட்டிக்கொள்ள முடிந்ததாக அந்நிறுவனம்
தெரிவிக்கின்றது.
பியர் இறக்குமதிக்காக அரசு நூறுவீதம் வரி
அறவிடுவதாலேயே மேலதிக செலவு ஏற்பட்டிருப்பதாகவும் இதனைச் சமாளித்து
பாவனையாளர் தேவையை பூர்த்தி செய்வதற்காகவே தனது உற்பத்தியை அதிகரிக்க
வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் லயன் நிறுவனம் மேலும் தெரிவித்திருக்கிறது.
No comments:
Post a Comment