Tuesday, May 21

இலங்கையில் முஸ்லிம்கள் ஒடுக்கப்படுகின்றனர் - அமெரிக்கா

 
இலங்கையில் முஸ்லிம் மக்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. 2012ம் ஆண்டுக்கான அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் சர்வதேச மதச் சுதந்திர அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கிறிஸ்தவ தேவாயலங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக விசாரணை நடாத்தி தண்டனை விதிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
இன ரீதியான முரண்பாடுகளை தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மத நம்பிக்கை இன சமூக அடிப்படையில் சமூக ரீதியான ஒடுக்குமுறைகள் இடம்பெறுவதாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
மத வழிபாட்டுத் தளங்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பீடு செய்யும் போது குறைவாகக் காணப்பட்டாலும், பௌத்த கடும்போக்காளர்கள், முஸ்லிம்கள் மீது அதிகளவு அழுத்தங்களை பிரயோகித்து வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment