தெற்கு கடுகதி வீதியில் பயணிகள் போக்குவரத்துக்காக இ.போ.ச பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவது மேலும் இரு வாரங்களினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, இ.போ.ச தெரிவிக்கின்றது. இ.போ.ச தலைவர் எம்.சி. பந்துசேன தகவல் தருகையில், இதற்காக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ள சொகுசு பஸ் சேவைக்கென தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு விஷேட பயிற்சிகள் வழங்கப்படுவதனால், இச்சேவை தாமதமடைந்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இன்னமும் வெளியிடப்படாத நிலையில், கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில பத்திரிகை ஒன்றில் அதன் முக்கிய பரிந்துரைகள் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன.
பலமான ஆயுதங்கள் தரித்த தீவிரவாதக் குழுவின் பிடியில் இருந்து பொதுமக்களை மீட்பதற்கு நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கம் கேட்டிருக்க வேண்டியதில்லை. அவ்வாறு போர் நடவடிக்கையை நிறுத்துவது தீவிரவாதிகள் மூர்க்கம் பெறுவதற்கு மட்டுமே வழிவகுக்கும்.