இலங்கையில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில் போக்குவரத்து தொடர்பான தகவல்களை தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் அறிவிக்க வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
சில ரயில் நிலையங்களில் ரயில் போக்குவரத்துக்கள் குறித்து மும்மொழிகளிலும் அறிவிப்பு செய்யப்படுவதில்லை என முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதென அரச மொழிக் கொள்கை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சில ரயில் நிலையங்களில் ரயில் போக்குவரத்துக்கள் குறித்து மும்மொழிகளிலும் அறிவிப்பு செய்யப்படுவதில்லை என முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதென அரச மொழிக் கொள்கை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அறிவிப்பாளர்களை பயிற்சிக்கும் செயற்திட்டமொன்று இன்றும் (29) நாளையும் (30) கொழும்பு பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக இணைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ரயில் நிலைய அறிவிப்பாளர்கள் 50 பேர் பயிற்றுவிக்கப்படவுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment