Wednesday, November 23

லிபியா இஹ்வானுல் முஸ்லிமின் தலைவராக உஷ்தாத் பஸீர் கிப்தி


புரட்சிக்குப் பிந்திய லிபியாவில் புதியதொரு நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் லிபிய இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கம் தன்னை முழுமையாக தயார்படுத்திவருகின்றது.பெங்காசியில் தமது முதலாவது பகிரங்க மாநாட்டைக் கூட்டிய லிபிய இஹ்வான்கள் ஜமாஅத்தின் தலைவராக உஸ்தாத் பஷீர் கிப்தியை தெரிவு செய்துள்ள அதேநேரம் மஜ்லிஸுஷ் ஷுறாவுக்கான புதிய உறுப்பினர்களையும் தெரிவுசெய்துள்ளனர்.
எகிப்திலும் தூனிஸியாவிலும் இஹ்வான்கள் புதிய அரசியல் கட்சிகளை ஆரம்பித்ததைப் போன்று அரசியல் கட்சியொன்றை ஆரம்பிப்பதில்லை என முடிவுசெய்திருக்கும் லிபிய இஹ்வான்கள், இயல்பான ஒழுங்கில் அரசியல் வாழ்வில் ஈடுபட தமது அங்கத்தவர்களை அனுமதித்துள்ளனர்.

ஒரு இஹ்வானிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கும் எண்ணம் ஜமாஅத்துக்கு இல்லை எனத் தெரிவித்திருக்கும் உஸ்தாத் கிப்தி இஸ்லாமிய அடிப்படையிலான ஒரு தேசிய கட்சியை அமைப்பதில் ஏனையவர்களுடன் இணைந்து செயற்பட அங்கத்தவர்களை ஜமாஅத் ஊக்குவிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். பொருளியல்துறைப் பேராசிரியரான உஸ்தாத் கிப்தி முன்னைய அரசின் கெடுபிடிகளால் நீண்டகாலம் நாட்டிற்கு வெளியே இருந்தார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னரே அவர் நாடு திரும்பினார்.

No comments:

Post a Comment