Wednesday, November 23

எழுந்திருக்காததால் கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு ஊழியர் மீது அமைச்சர் தாக்குதல்

 
[ புதன்கிழமை, 23 நவம்பர் 2011,
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை பாதுகாப்பு ஊழியர் ஒருவர் அமைச்சர் ஒருவரால் தாக்கப்பட்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் வழமையான பிரமுகர்கள் வழியாக உட்சென்ற போது அங்கு முதலில் காணப்பட்ட பாதுகாப்பு ஊழியர் அமைச்சரைக் கண்டு ஆசனத்தை விட்டு எழுந்திருக்காமல் இருந்துள்ளார்.
இதன்போது அமைச்சர் அவரைப் பேசிவிட்டு தொடர்ந்து நடந்து செல்லும்போது அடுத்த இடத்தில் காணப்பட்ட பாதுகாப்பு ஊழியரும் எழுந்திராது ஆசனத்தில் அமர்ந்திருந்துள்ளார்.

அமைச்சரைக் கண்டு அவரும் எழுந்திருக்காததால் ஆத்திரமுற்ற அமைச்சர் அவரைத் தாக்கியதாக விமானநிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
தாக்குதலுக்கிலக்காகி காயமடைந்த பாதுகாப்பு ஊழியர் பின்னர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கும் புகார் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment