நாட்டில் அவதூறு ஏற்படும் வகையில் தகவல்களை வெளியிட்டால் ஊடகவியலாளர்கள் சவப்பெட்டி ஒன்றை தயார்படுத்திக் கொள்ள வேண்டுமென மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய காலச் சூழலில் சில ஊடகவியலாளர்களின் செயற்பாடுகள் எந்த வகையிலும் திருப்தி அளிக்கும் வகையில் அமையவில்லை எனவும் நாட்டின் முக்கிய நபர்களுக்கு அவதூறு ஏற்படும் வகையில் பொய்யான தகவல்களை உருவாக்கி சில ஊடகவியலாளர்கள் செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுநாயக்க பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
டொலர்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் அரசாங்கத்திற்கு எதிராக தகவல்களை வெளியிடுவதாகக் குறிப்பிட்ட அவர், தமக்கு எதிராகவும் சிலர் இவ்வாறான சேறு பூசல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவற்றுக்கு தாம் ஒருபோதும் அஞ்சப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment