இலங்கையில் இருக்கின்ற அரபுக் கல்லூரிகளில் பணியாற்றுகின்ற விரிவுரையாளர்களுக்கு வீஷேட பயிற்சி வழங்குவதற்காக கல்லூரி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் முன்வைத்த கோரிக்கைக்கு புத்தசாசன மத விவகார அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது.
உலமாக்களை உருவாக்குகின்ற- அல்ஆலிம் பரீட்சைக்கு தயார்ப்படுத்துகின்ற அரபுக் கல்லூரி விரிவுரையாளர்களை, அரச பாடசாலைகளில் கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்குவதைப் போன்று விஷேட பயிற்சி வழங்கி அதனூடாக சிறப்பான விரிவுரையாளர்களை உருவாக்குவதற்கு ஒரு பயிற்சிக் கல்லூரி அவசியம் என்று அவர் புத்தசாசன மத விவகார அமைச்சினுடைய பாராளுமன்ற குழுவுக்கு ஆலோசனையை முன்வைத்திருந்தார்.
இந்த ஆலோசனை தொடர்பாக கடந்த இரண்டு முன்று மாதங்களுக்கு மேலாக அமைச்சிக்களிலிருந்தும் ஏனைய நிறுவனங்களிலிருந்தும் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நேற்று அந்த விடயம் பேச்சுவார்த்தைக்கு எடுக்ப்பபட்டது.
இது தொடர்பாக நேற்று பாராளுமன்ற குழு அறையில் இடம்பெற்ற புத்தசாசன மதவிவகார அமைச்சுக்கான கூட்டத்தில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது; இலங்கையில் முஸ்லிம் கலாசார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட 226 அரபிக் கல்லூரிகளும் பதிவு செய்யப்படாத சுமார் 100 அரபிக் கல்லூரிகளும் இயங்குகின்றன. இந்த கல்லூரிகளில் கற்பிக்கின்ற விரிவுரையாளர்களுக்கு எதுவிதமான பயிற்சியும் இல்லை. இதனால் எல்லா பீடங்களிலும் சரியான முறையில் பயிற்றுவிக்கப்படுவது இல்லை. அது மாத்திரமல்ல அவர்கள் எதிர்கால சமூகத்திற்கு ஏற்ற வகையில் சிறந்த விரிவுரையாளராக மாற்ற வேண்டும்.
எனவே ஏனைய அரச பாடசாலைகளில் கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவதைப் போன்று இந்த அரபிக் கல்லூரிகளில் கற்பிக்கின்ற விரிவுரையாளர்களுக்கும் இவ்வாறான பயிற்சியை வழங்குவதற்கான ஒரு பயிற்சிக் கல்லூரியை முஸ்லிம் கலாசார அமைச்சின் கீழ் உருவாக்க வேண்டுமென அவர் வேண்டுகோள விடுத்தார்.
சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி வன்னி மாவட்ட பாராளுமன்ற உனைஸ் பாறூக் ஆகியோர் இதற்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவ்வாறான பயிற்ச்சிக் கல்லூரி ஒன்றை அமைப்பது எனவும் கொழும்பு மருதானையில் கட்டப்பட்டு வருகின்ற முஸ்லிம் கலாசார திணைக்களத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் இரண்டு அறைகளை இதற்குப் பயன்படுத்துவது எனவும் புத்தசாசன மத விவகார அமைச்சின பாராளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் இதற்கு தேவையான உபகரனங்களையும் தளபாடங்களையும் பெற்றுக் கொடுப்பதற்கு அமைச்சர் பௌசி அவர்களும் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். இத்திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்ற்கொல்லுமாறு அமைச்சின் செயலாளர் கேசியன் ஹேரத் துக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இது இலங்கை முஸ்லிம்களுடைய வரலாற்றில் ஒரு முக்கியமான தீர்மானமாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடைய அணுசரனையோடு புத்தசாசன மதவிவகார அமைச்சு எடுத்திருக்கின்ற இத்தீர்மானம் இலங்கை முஸ்லிம்களுக்குச் செய்துள்ள மிகப்பெரும் கௌரவமும் வரப்பிரசாதமுமாகும் என்று பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
No comments:
Post a Comment