M.ரிஸ்னி முஹம்மட்: இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம் அனாதை இல்லங்களையும் மற்றும் அனாதை பராமரிக்கும் நிறுவங்களையும் உள்ளடக்கிய ஒன்றியம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் உப தலைவர்களுள் ஒருவரும் ஜாமியா நழீமியாவின் பிரதிப்பணிப்பாளருமான அஷ்ஷெய்க் ஏ.சீ. அகார் முஹமத் lankamuslim.org க்கு தெரிவித்தார்.
அவர் தெரிவித்துள்ள தகவலில் உலகில் அனாதைகள் பிரச்சினை பாரிய பிரச்சினையாக உள்ள நிலையில் இலங்கையில் அனாதைகளின் எண்ணிக்கை நான்கு லட்சம் வரை உள்ளது. முஸ்லிம் சமூகத்தில் 35 வரையான அனாதை இல்லங்களும் அனாதைகளை பராமரிக்கும் நிறுவங்களும் உள்ளது இருந்தபோதும் அவற்றுக்கு இடையில் கூட்டுறவு, ஒருங்கமைப்பு என்பன இல்லாத காரணத்தால் சில அனாதைகளை பலரும் பல அனாதைகளை எவரும் பெறுப்பு எடுத்தாக நிலையுள்ளது.
அனாதைகள் பற்றிய விபரங்கள் அவர்களின் எண்ணிக்கை பற்றிய சரியான தகவல்கள் பெற்று இந்த அனாதைகளை சரியான முறையில் பராமரிக்க அவசியமுள்ளது, அவர்களுக்கு பல தரப்பட்ட பயிற்சிகள் வழங்கவேண்டிய தேவையுள்ளது அனாதை இல்லங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டியுள்ளது அதன் மாணவர்களுக்கு உளவள ஆலோசனை, மனநல சிகிச்சை, சமார்க்க வழிகாட்டல், ஆன்மிக வழிகாட்டல்கள் என்பனவும் தேவைப்படுகின்றது. இவற்றை நோக்கமாக கொண்டும் இலங்கையிலுள்ள இது தொடர்பான அனைத்து நிறுவங்களையும் ஒன்றிணைத்து இந்த ஒன்றியம் உருவாகப்பட்டுள்ளது.
அனாதை என்ற நிலையை அவர்கள் தமது வயது எல்லையின் ஊடாக கடந்த பின்னரும் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய தேவை இருக்கின்றது. இந்த ஒன்றியத்தின் மூலம் அனாதைகள் ஆதரவற்றோர் ஆகிய இரு சாராரும் உள்வாங்கப்பட்டு இவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டுவதன் மூலம் இவர்களுக்கு தேவையான உதவிகளை நிறுவங்களின் மூலம் பெபெற்று அவற்றை முறையாக பயன்படுத்த முடியும் .
இந்த ஒன்றியத்தின் உருவாக்க முயற்சி கடந்த ஆறு மாதகாலமாக முன்னெடுக்கப்பட்டு கடந்த வாரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப கட்டம் முஸ்லிம் சமூகத்தின் அனாதைகள், ஆதரவற்றோர் விடயத்தில் கவனம்செலுத்தி செயல்படும். கிட்டிய எதிர்காலத்தில் இலங்கையின் அனைத்து சமூகங்களிலுமுள்ள அனாதைகள் ஆதரவற்றோர் விடயத்தில் கவனம்செலுத்தி செயல்படும் என்று தெரிவித்தார். அஷ்ஷெய்க் ஏ.சீ. அகார் முஹமத் உதயமாகியுள்ள ஒன்றியத்தின் செயல்குகு சார்பில் இந்த தகவலை தெரிவித்தார்.
No comments:
Post a Comment