Wednesday, November 23

தாக்கியது தவறுதான் இருந்தாலும் செய்ய வழியில்லை - மைத்திரிபால

தாக்கியது தவறுதான் இருந்தாலும் செய்ய வழியில்லை - மைத்திரிபால

 

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை அனுமதிக்கக்கூடிய ஒன்று அல்ல என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எனினும் தாக்குதல் நடத்தும் வழக்கத்தை ஐக்கிய தேசியக் கட்சியே ஆரம்பித்து வைத்ததாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

அங்கு என்ன நடக்கும் என்று தெரிந்திருந்த எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கையை அசைத்து எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை உசுப்பிட்டதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டம் சமர்பிக்கப்படுவதை தவிர்க்க எதிர்கட்சி சூழ்ச்சி செய்ததன் காரணமாகவே குழப்பநிலை ஏற்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.    

No comments:

Post a Comment