தலைமை ஆசிரியை மரியா |
உலகின் முதலாவது சர்வதேச 'செக்ஸ்' பாடசாலை வியன்னாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இங்கு மாணவர்களான காதலர்கள் எப்படி சிறந்த காதலர்களாக இருக்கவேண்டும் என்று கற்பித்துக் கொடுக்கின்றனர் (வாய்க்குள் விரலை வைத்தால் கடிக்கத் தெரியாவர்களுக்கு படித்துக் கொடுக்கிறார்களாம்). வியன்னாவில் உள்ள இந்த சர்வதேச செக்ஸ் பாடசாலையில் மாணவர்களிடமிருந்து £ 1,400 தொகையை அறவிடுகிறார்களாம்.
அங்கு பணியாற்றும் தலைமை ஆசிரியை மரியா தோம்சன் இதுபற்றி கருத்து தெரிவிக்கையில், 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பயன்படும் வகையில் அமைக்கப்பட்ட "உலகின் முதலாவது பிரயோக செக்ஸ் கல்லூரி- College of Applied Sex" இதுதான். இதைவிட என்ன வேண்டும் என்றும் கேட்கிறார் அந்த தலைமை ஆசிரியை.
இங்கு ஆண், பெண் மாணவர்களை 'கலந்து' பயிற்சிகள் செய்து பழக விடுகிறார்களாம். அதில் வீட்டுப் பயிற்சி (Home Work) வேறு கொடுக்கிறார்களாம். (என்ன கொடுமை சேர் இது... இதற்கு பெற்றோர்கள் கட்டணம் செலுத்தி படிக்கவிடுவார்களா?) இவர்களது அடிப்படைக் கல்வி பாடத்திட்டமாக இல்லையாம், அது நடைமுறைக்கு சாத்தியமில்லாததால் செய்முறைப் பயிற்சிதான் கொடுக்கிறார்களாம். இதனால் காதலன்-காதலி உறவை வலுப்படுத்த திட்டம் தீட்டியிருக்கிறார்களாம்.
இந்தப் பாடசாலையில் செக்ஸ் செய்முறைகள், உணர்வைத் தூண்டும் நுட்பங்கள், உடற்கூறியல் அம்சங்கள் என்பவற்றை மாணவர்களுக்கு கற்பித்துக் கொடுக்கின்றார்களாம். இந்தக் கருமத்தையும் படித்துக்கொடுக்க ஒரு சர்வதேச பாடசாலையாம். உலகம் எங்கே போகிறது? உலகம் விரைவில் அழியப்போகின்றதா?
No comments:
Post a Comment