Sunday, November 20

மதுபானத்தையோ, நாஸ்த்திகத்தையோ, ஓரினச் சேர்க்கையையோ தடை செய்யாது-டியுனீஸிய புதிய அரசாங்கம்- ஏமாந்து போனமுஸ்லிம் சமூகம்

 டியுனீஸிய அரசாங்கம் மதுபானத்தையோ, நாஸ்த்திகத்தையோ, ஓரினச் சேர்க்கையையோ தடை செய்யாது. இவற்றில் ஈடுபடுபவருக்கு தண்டனையும் வழங்காது: முஸலிம்களாகிய நாம் மார்க்கத்தை அலட்டிக் கொள்ளாத வர்களிடம் எதிர் பார்ப்பதை விட இஸ்லாமிய இயக்கம், இஸ்லாமியக் கட்சி, இஸ்லாமிய அரசாங்கம் என்ற பெயரோடு வருபவர்களிடம் பலவற்றை எதிர் பார்த்திருப்பது பழகிப் போன விடயம்.

அந்த வரிசையில் அன்மையில் ‘டியுனீஸியா’வில் ‘அன்னஹ்தா’ மறுமலர்ச்சி கட்சி அரசாங்கத்தை அமைத்ததைத் தொடர்ந்து ‘இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் சாதகமாக பல விடயங்கள் நடக்கப் போகிறன’ என முஸ்லிம்களில் பலரும் எதிர்பார்த்தனர். நமது தமிழ் பேசும் முஸ்லிம் உலகமும் இது பற்றி எழுதவும் எதிர் பார்க்கவும் தவறவில்லை.

ஆனால் ‘அன்னஹ்தா’ மறுமலர்ச்சிக் கட்சயின் பேச்சாளர் Riad Chaibi எனும் ஸ்பெயின் பத்திரிகை நிருவனத்துக்கு ஒக்டோபர் 25/ 2011 அன்று வழங்கிய நேர்காணலைப் பார்த்த போது மிகுந்த வேதனையாக இருந்தது.அந்த நேர்காணலில் இருந்து சில பகுதிகளை நாமும் படித்து, படிப்பினை பெற வேண்டிய கடமை எமக்கு இருக்கின்றது..
· மதுபானம் குடிப்பதையோ, நாஸ்த்திகத்தையோ, ஓரினச் சேர்க்கையையோ நாம் தண்டிக்கப் போவதில்லை.
· நாஸ்த்திகமும் ஓரினச் சேர்க்கையும் டியுனீஸியாவில் உள்ள யதார்த்தமாகும்.அவை இருப்பதற்கு உரிமை உண்டு.
· தனிப்பட்ட சுதந்திரங்களும் மனித உரிமைகளும் போற்றப்பட வேண்டிய கொள்கைகளாகும்
· நாம் யாரையும் மது அருந்துங்கள் அருந்தாதீர்கள் என்று கட்டாயப்படுததப் போவதில்லை. எமது கொள்கை மது மற்றும் போதை வஸ்து ஆகியவற்றின் பாதகத்தைக் கூறி மக்களின் கருத்தைக் கவருதே.எமக்கு கட்டாயம் படுத்தும் நோக்கம் கிடையாது.
அல்லாஹுத் தஆலா, இஸ்லாத்தின் பால் அழைக்கின்ற, நன்மையை ஏவி தீமையைத் தடுக்கின்ற கூட்டம் உருவாக்கப்படுவதை கட்டாயப்படுத்தியிருக்கின்ற அதே வேளை, இறைவனின் வேதத்தை சம் பூரணமாக நடை முறைப் படுத்தும் அரசாங்க முறையை நபி முஹம்மது(ஸல்)அவர்களைக் கொண்டு அமைத்தும் காட்டினான்.
இந்த அரசாங்க முறையை முஸலிம்கள் காலம் காலமாக துயர வேண்டும் என்றும் கடமையாக்கினான். ஹலாலை ஊக்குவித்து நடை முறைப் படுத்துவதும் ஹராமைக் கண்டித்து தடை செய்யவதும் இஸ்லாமிய அரசாங்கத்தின் பணி என்பதை புரிந்து முன்னோர்கள் ஆண்டார்கள். இது ஆயிரத்து முன்னூறு வருடங்களாக உலகில் இருந்து வந்தது.
முழுமையாக இஸ்லாத்தில் நுழைவதைக் கடமையாக்கிய இறைவன் சத்தியத்தோடு அசத்தியத்தை கலக்கின்ற பணியை கடுமையாக ஹராமாக்கினான். இவை யாவும் சகலருக்கும் மிகவும் பரிட்சயமான சத்தியங்களாகும்.
இஸ்லாத்தின் அடிப்படைகளான இவற்றைப் புறக்கணிக்கின்ற மனிதனும் இயக்கமும் கட்சியும் அரசாங்கமும் பெயரால் இஸ்லாமியர்களாக இருக்கலாம். ஆனால் செயலால் இஸ்லாத்துக்கும் இவர்களுக்கும் தொடர்பில்லை என்பதை அல்குர்ஆனும் ஹதீசும் பலவாறு கூறுவதைத் தெளிவாகவே அவதானிக்க முடிகின்றது.
இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாத்தை விற்கின்ற இப்படியான கட்சிகளை நவீன இஸ்லாமிய எழுச்சியின் கர்த்தாக்கள், நாம் பின்பற்ற வேண்டிய மாதிரி இது தான் என்றெல்லாம் இனிமேலும் பரப்புரைகள் செய்யாமலிருக்க இந்தக் கூற்றுக்கள் தாராளமாய்ப் போதும் என்பது எனது உறுதியான கருத்தாகும். இதை ஏற்கத் தயங்குபவர்கள் தமது சிந்தனையைத் தான் மாற்றியாக வேண்டும்.
சத்தியத்தை சத்தியமாக விளங்கி அதனைத் துயரவும் அசத்தியத்தை அசத்தியமாக விளங்கி அதனைத் தவிர்ந்து கொள்ளவும் அல்லாஹ் எமக்கு அருள்பாளிப்பானாக!
குறிப்பு :
இந்த கட்டுரையாளர் முன்வைக்கும் கருத்துகளுக்கு மாற்று பார்வை , விமர்சனம் தெரிவிக்க விரும்புபவர்கள் உங்கள் ஆங்கங்களை எமக்கு அனுப்பமுடியும் அவற்றையும் நாம் பதிவு செய்வோம்.

No comments:

Post a Comment