போரதனைப் பல்கலைக்கழகத்தில் பெண் மாணவிகள் மீது அரை நிர்வாண பகிடி வதை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.. இதன்போது முதலாம் ஆண்டு மாணவிகளை இரண்டாம் ஆண்டு சக மாணவிகள் இவ்வாறு பகிடி வதைக்கு உள்ளாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முதலாம் ஆண்டைச் சேர்ந்த பத்து மாணவிகளை இரண்டாம் ஆண்டு மாணவிகள் இவ்வாறு அரை நிர்வாணப்படுத்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்படுகிறது.
பகிடி வதை மேற்கொண்ட இரண்டாம் ஆண்டைச் சேர்ந்த மூன்று மாணவிகளுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் வகுப்புத் தடை விதித்துள்ளது.
கடந்த 17ம் திகதி இவ்வாறு பகிடி வதை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய இன்னும் சில மாணவிகள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
No comments:
Post a Comment