அமெரிக்காவில், குண்டு வைக்க முயன்ற, அல்-குவைதா ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து, நியூயார்க் மேயர் மைக்கேல் ப்ளூம்பெர்க் குறிப்பிடுகையில், "டொமினிக்கன் குடியரசை சேர்ந்தவர் ஜோஸ் பிமென்டல்,27. அமெரிக்க குடியுரிமை பெற்ற இவர், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் தாயகம் திரும்பும் போது, அவர்கள் பயணிக்கும் வாகனத்தை, பைப் வெடிகுண்டு மூலம் தகர்க்க திட்டமிட்டிருந்தார்.
அல்-குவைதா ஆதரவாளரான ஜோஸ், கடந்த வாரம், நியூயார்க்கில் உள்ள குடியிருப்பில் தங்கியிருந்த போது, போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த 2009ம் ஆண்டு முதல், இவரது நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்து வந்துள்ளனர். இவர், பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்பு வைத்திருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன' என்றார்.
No comments:
Post a Comment