மேற்படி குண்டுகளை இந்த வருட ஆரம்பத்தில் அமெரிக்கா மீள் வடிவமைத்து அதன் வெடிப்பு சக்தியை இரு மடங்காக அதிகரித்துசுப்பர் பங்கர் பஸ்டர் எனபெயரிட்டது. பதுங்கு நிலைகள், சுரங்கங்கள், நிலத்தின் கீழ் செல்லும் குழாய்கள், போன்றவற்றை தகர்க்க வல்லது இந்த பங்கர் பஸ்டர் குண்டுகள். இரும்பு உருக்கு, கருங்கற்கள், சீமெந்து போன்றவற்றை சிலநொடிகளில்
சின்னாபின்னமாக்கவல்ல குண்டுகள் இவை.
இந்த படைக்கலன்கள் (Joint Direct Attack Munisions) சுமார் 4000 வரை மத்திய கிழக்கின் இதயத்தில் களமிறக்கப்படப் போகின்றன. மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளிடையே பாரிய ஆயுத போட்டியை உருவாக்குவதன் மூலம் பல ஆயிரம் பில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள முனைகிறது அமெரிக்கா. கூடவே இந்த ஆயுதங்கள் மூலம் ஒன்றை ஒன்று தாக்கி அழிந்து போகும் சூழ்நிலையையும் பின்னர் ஏற்படுத்தப் பார்க்கிறது.
பல ஆயிரம் கோடிகளிற்கு ஐக்கிய அரபு இராச்சியம் அண்மையில் தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் நிலத்தில் இருந்து தாக்கும் ஏவுகணை தொகுதிகளை ஸியோனிஸத்தின் தாயகமான அமெரிக்காவிடம் இருந்து கொள்வனவு செய்திருந்தது். இந்த ஏவுகணைகள் அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் தரமுடையவை என்பது வேறுவிடயமாகும். இவ்வாறே அன்று சோவியத் ரஷ்யா ஈராக்கிற்கு ரஷ்ய இராணுவத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட “ஸ்கட்” ஏவுகணை தொகுதிகளை விற்றிருந்தது. முதலாவது குவைத் யுத்தத்தில் சதாம் ஹீஸைனின்கணக்கு தப்பியது இவ்வாறுதான். இலக்குகளை விட்டு விட்டு எங்கெங்கேயோ போய் இஸ்ரேலினுல் வெடித்தன சதாமின் ஏவுகணைகள்.சவுதியும், ஐக்கிய அரபு இராஜ்ஜியமும் யார் மீது குண்டு போட இதனை வாங்குகின்றன?. “ஒரு முஸ்லிம் தலைவனும் தப்பிவிடக் கூடாது” என்ற ஸியோனிஸ கொள்கைக்கு துணை போகும் நாடுகளாகவே இவை மாறி நிற்கப்போகின்றன. இல்லை மாறி நிற்க வைக்கப்படப் போகின்றன. நாளைய அகண்ட யூத சாம்ராஜ்ய கனவை நிறைவேற்ற இவையெல்லாம் தேவை தானே.ஒரு பீப்பாய் பெற்றோலை விற்று ஒரு பரல்
முஸ்லிமின் இரத்தத்தை குடிக்கும் யூத சூத்திரம் ஏன் இந்த அரபு முட்டாள்களிற்கு புரியவில்லை?
No comments:
Post a Comment