Thursday, November 24

முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அநுருத்த ரத்வத்தை மரணம்


இலங்கையின் முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அநுருத்த ரத்வத்தை சற்றுமுன்னர் மரணமடைந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையின் முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அநுருத்த ரத்வத்த கடந்த செவ்வாய்க்கிழமை கண்டி பொதுவைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

வீட்டினுள் விழுந்து காயமடைந்துள்ளதனால் கண்டி பொது வைத்தியசாலையில் அனுருத்த ரத்வத்த அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை பாராளுமன்ற பொதுத் தேர்தலொன்றின்போது உடதலவின பகுதியில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் 11 பேரின் படுகொலைகளின் முக்கிய சூத்திரதாரியான ரத்தவத்த, அதிகார வர்க்கத்தின் ஆசிர்வாதம் காரணமாக அந்த குற்றச்சாட்டுக்களிலிருந்து கீழ்நீதிமன்றங்களின் உதவியுடன் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment