இலங்கை நாணயத்தின் பெறுமதி குறைந்துவிட்டது என்ற கருத்தைப் நேற்று முன்தினம் இலங்கை அரசு மறுத்திருந்தது.
சர்வதேச நாணய நிதியம் கேட்டுக்கொண்டதற்கிணங்க கடன் அடைக்கவேண்டிய 2.6 பில்லியன் டொலரையும் பாதுகாக்கவே இவ்வாறு குறைத்துள்ளதென்ற கருத்து ஏற்பட்டிருந்ததென AFP செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
திங்கட்கிழமை கொழும்பு, ரூபாயின் பெறுமதியை 3 வீதத்தினால் குறைத்திருந்தது. நிதியமைச்சைப் பாதுகாக்க அண்மைய மாதங்களில் மில்லியன் டொலர்களினைச் செலவழித்தபோதிலும் இக்குறைப்பைச் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச நாணய நிதியத்தின் கொடுப்பனவு பற்றிய வெளியிடல்கள் வோசிங்ரனைத் தளமாகக் கொண்ட நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த நிறுவனமே இலங்கை தனது ஏற்றுமதியில் போட்டி மற்றும் பாதுகாப்புச் சேமிப்புகளை உறுதிப்படுத்துவதற்காக ஏற்றுக்கொள்ளக்கூடிய பணமாற்றுவீதக் கொள்கையினைச் செய்யும்படி பணித்திருந்தது.
ஆனால் சர்வதேச நாணய நிதியத்திற்கான அமைச்சர் சரத் அமுனுகம குறிப்பிடுகையில்,சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இன் கருத்துக்கள் தமது முதன்மைத் தெரிவுகள் அல்ல என்றும் தாங்கள் இலங்கையின் முதன்மைத் தெரிவுகளைச் சந்திக்க அனைத்துக் குறைப்புக்களையும் செய்துவிட்டதாகக் கொழும்பில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
மேலும், இலங்கையின் பொருளாதாரம் பலமாக முன்னேறி வருவதால் கடனிலிருந்து மீளவேண்டிய இறுதிக் கொடுப்பனவிற்கான தேவையுமிருக்காது எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் 3 பில்லியன் (வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கை குடிகளால்) வெளிநாட்டுப் பணமும் தம்மிடம் வந்துள்ளதாகவும் 8 வீதமான வளர்ச்சி அதில் காணப்படுவதாகவும் கூறினார்.
தாங்கள் ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் இல்லையென்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் ஓடவேண்டிய நிலையில் இல்லையென்றும் தமக்கு அந்தப் பணம் தேவையில்லையென்றும் குறிப்பிட்டார்.
எனினும் பின்னர் அவர் தமது அரசு சலுகை அடிப்படையில் கடன் தரப்படுமென்றால் மட்டுமே அதுபற்றித் தீர்மானிக்குமென்றும் கூறினார்.
2009 இல் இலங்கையின் பொருளாதாரம் 1 பில்லியனிற்கும் கீழே விழுந்தபோதும் கொடுப்பனவு நெருக்கடியில் பாரிய சமநிலைத் தழும்பலை எதிர்நோக்கியிருந்தபோதும் IMF இ டம் உதவிகோரியிருந்தது.
இலங்கையின் கொடுப்பனவுத் திகதி ஏப்ரலில் இருந்தபோது அதற்கு முன்னதாக 1.8 பில்லியனைப் அது கடனாகப் பெற்றிருந்தது. தொடர்ந்து ஏப்ரலில் 218.3மில். டொலரை IMF கொடுத்திருந்தது.
எனினும் 2009 இல் போர் முடிந்த பின்னர் தமது பொருளாதாரம் பலமாக முன்னேறிவருவதாக அரசு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment