துருக்கியை சேர்ந்த முஸ்லிம்கள் சவுதி அரேபியாவில் தங்களது புனித ஹஜ் யாத்திரையை முடித்துக் கொண்டு 9 பஸ்களில் திரும்பிக் கொண்டிருந்தனர். சிரியாவில் ஹோம்ஸ் நகரம் அருகே பாப்ஹலா பகுதியில் எல்லையை கடக்க முயன்றனர். அப்போது அங்கு சிவப்பு நிற காரில் ராணுவ வீரர்கள் வந்தனர்.
அவர்கள் துருக்கி ஹஜ் பயணிகள் வந்த பஸ்களின் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதனால் முன்னாள் சென்று கொண்டிருந்த 2 பஸ்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இச்சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துக்கு துருக்கி பிரதமர் ரீசெப் தயீப் என்டோகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் சிரியா அதிபர் பஷார்-அல்- ஆசாத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், ராணுவத்தின் மூலம் தனது சொந்த மக்களை (முஸ்லிம்களை) கொன்று குவிக்கும் ஆசாத்தின் நாட்கள் எண்ணப்படுகின்றன.மக்களின் போராட்டத்தை ராணுவத்தின் மூலம் அடக்க முடியாது. எனவே அவரது ஆட்சி தொடர்ந்து நீடிக்க முடியாது. அந்த நாள் விரைவில் வரும் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment