Monday, November 21

க.பொ.த. உயர்தரத்தில் கொரியா மொழியும் சேர்ப்பு




கொரியாவிற்கு வேலை வாய்ப்பினை பெற்றுச் செல்ல முனையும் இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் கொரிய மொழியையும் ஒரு பாடமாக உள்ளடக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஆங்கிலம் சீன ஜேர்மன் பிரெஞ் மற்றும் ஹந்தி மொழிகள் உயர்தர பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, எதிர்வரும் டிசெம்பர் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத் தராதர பரீட்சைக்கு 5 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். இவர்களுக்காக நாடளாவிய ரீதியாக 3 ஆயிரத்து 600 மத்திய நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்களுக்காகவும் சிறையில் உள்ளவர்களுக்காகவும் விசேட பரீட்சை நிலையம் ஒன்று வவுனியாவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment