அமெரிக்க சி.ஐ.ஏ. மற்றும் இஸ்ரேலிய மொஸாட் உளவாளிகள் எனக் கருதப்படும் 12 பேர் ஈரானில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சி.ஐ.ஏ. (அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு) மற்றும் இஸ்ரேலின் மொஸாட் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இவர்கள் அனைவரும் ஈரானின் அணு ஆயுத நடவடிக்கைகளை புலனாய்வு செய்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்கா , இஸ்ரேல் ஆகியன ஈரானுக்கெதிராக இத்தகைய பல்வேறு சதித்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக அந்நாட்டு புலனாய்வுப் பிரிவினரின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
ஈரானிய அதிகாரிகளின் துரித நடவடிக்கைகளின் மூலமே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவ்வதிகாரி குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னரும் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் உளவாளிகள் பலர் ஈரானில் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் பலர் கொல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment