கொழும்பு மருதனை பிரதேசத்தில் உள்ள இஸ்லாமிக் புக் ஹவுஸ், தெளஹீத்
ஜமாஅத்தின் பள்ளிவாசல் உள்ளிட்ட சில முஸ்லிம் நிறுவனங்களை மார்ச் 31 ஆம்
திகதிக்கு முன் மூடுமாறு அச்சுறுத்தி குறித்த நிறுவனங்களுக்கு கடிதம்
அனுப்பப்பட்டுள்ளது.
இன்று காலை குறித்த நிறுவனங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ள குறித்த கடிதமானது பொது பல சேனாவின் கடிதத் தலையில் எழுதப்பட்டிருந்தது.
கடிதம் கிடைக்கப்பெற்ற குறித்த நிறுவனங்கள் தமது செயற்பாடுகளை மார்ச் 31 ஆம் திகதிக்குள் முடித்துக்கொள்ளவேண்டும் எனவும் இல்லாதபட்சத்தில் தமது பலத்தை கண்டுகொள்ள வேண்டிவரும் எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் தாம் அவ்வாறான எந்தவொரு கடிதத்தினையும் எந்தவொரு நிறுவனத்துக்கும் அனுப்பவில்லை என பொது பல சேனா தெரிவித்துள்ளது. அத்துடன் இது தொடர்பில் பொலிசார் உடன் விசாரணை நடத்தி குறித்த கடிதத்தை அனுப்பியவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் குறித்த அச்சுறுத்தல் கடிதங்களில் இரண்டு விசாரணையின் பொருட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக முஸ்லிம் கவுன்சிலின் முக்கிய உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.






ஏப்ரல் 15 ஆம் திகதியை பொது மற்றும் வர்த்தக விடுமுறை தினமாக அறிவிப்பது தொடர்பில் அரசாங்கம் பரிசீலனை செய்து வருகின்றது.







இனவாதத்தை
தூண்டும் சகல முயற்சிகளும் முறியடிக்கப்படும். சில கடும்போக்குடைய
சக்திகள் நாட்டில் இன மற்றும் மத முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சித்து
வருவதாக தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றம்
சுமத்தியுள்ளார்.












பெஷன்
பக் தாக்குதலில் ஈடுபட்டவர்களை சட்டத்தின்முன் நிறுத்த நடவடிக்கை
மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவுகளை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி
உறுதியளித்துள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.






