Thursday, June 30

சூரிய சக்தியில் இயங்கும் மடிக்கணணிகள் விரைவில் அறிமுகம்


laptop11
29-06-2011: தற்போதைய சூழலில் மின்சக்தி மற்றும் எரிபொருள் சக்தி என்பவற்றுக்கு பதிலாக இயற்கை சக்திகளை பயன்படுத்தி தொழில்நுட்ப சாதனங்களை இயக்குவதற்கான ஆராய்சி மற்றும் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இலத்திரனியல் சாதன உற்பத்தியில் பெரும் நிறுவனமான சாம்சுங் நிறுவனம் சூரிய சக்தியின் மூலம் இயங்கும் மடிக்கணணிகளை ஜூலை மாதத்தில் அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. இது NET BOOK NC215S என்ற பெயரில் வெளியிடவுள்ளது.

முஸ்லிம் பாடசாலைகளின் நோன்பு விடுமுறையை இரத்துச் செய்வது பற்றி கல்வியமைச்சு ஆராய்வு


சந்திகள் தோறும் புத்தர்சிலைகள் அமைக்க அஸ்கிரிய பீடாதிபதி எதிர்ப்பு


[ புதன்கிழமை, 29 யூன் 2011, 06:17.25 PM GMT ]
இலங்கையின் சந்திகள் தோறும் புத்தர் சிலைகளுடன் கூடிய வழிபாட்டு மையங்களை அமைக்கும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு அஸ்கிரிய பீடாதிபதி சங்கைக்குரிய உடுகம ஸ்ரீ புத்தரகித்த தேரர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.


Wednesday, June 29

போர்க்குற்றச்சாட்டுகளுக்கு முழுப்பொறுப்புக் கூறவேண்டியது பசில்! கோட்டா அறிக்கை தயாரிப்பு- tamilcnn

போரின்போது வடபகுதிக்கு உணவுப்பொருட்களையும் மருந்துகளையும் அனுப்பும் பொறுப்பு பசில் ராஜபக்சவிடமே இருந்தது என்றும் அதுதொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு அவரே பொறுப்புக் கூற வேண்டும் என்ற தொனிப்படும் அறிக்கை ஒன்றை பாதுகாப்பு அமைச்சு தயாரித்துள்ளது.

Tuesday, June 28

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு நேரடியாக ஏவுகணைகளைச் ஏவக்கூடிய செலுத்திகளை அறிமுகப்படுத்தியது ஈரான்(காணொளி இணைப்பு) _



 
  ஈரான் முதன் முறையாக உந்து விசையின் மூலம் ஏவுகணைகளைச் ஏவக்கூடிய நிலக்கீழ் செலுத்திகளை (Silos) நிர்மாணித்துள்ளதாக நேற்று அறிவித்தது.

இந்நிலக்கீழ் அமைப்பின் மூலம் (silos) குறுந்தூர மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை இலகுவாக செலுத்த முடியுமென ஈரான் அறிவித்துள்ளது.

வடக்கு கிழக்கு நீதிமன்றங்களில் என்ன மொழி பயன்படுத்தப்பட வேண்டும்? விரைவில் தீர்வு



[ செவ்வாய்க்கிழமை, 28 யூன் 2011, 01:18.08 AM GMT ]
வடக்கு கிழக்கு நீதிமன்றங்களில் என்ன மொழிப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பான கேள்விக்கு விரைவில் பதிலளிக்கப்பட உள்ளது. வடக்கு கிழக்கு நீதிமன்றங்களில் எந்த மொழியைப் பயன்படுத்துவது என்பது தொடர்பில் ஆலோசனை வழங்குமாறு யாழ்ப்பாண உயர்நீதிமன்றமொன்று உச்ச நீதிமன்றிடம் கோரியிருந்தது.
இந்த கோரிக்கை தொடர்பில் உச்ச நீதிமன்றம் விரைவில் ஆலோசனை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

மொழிப் பாகுபாடுகளுக்கு தண்டனை: உத்தியோகபூர்வ மொழிகள் ஆணைக்குழு




அரசாங்க நிறுவனங்களின் மொழி பாகுபாடு தொடர்பாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் கிடைத்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உத்தியோகபூர்வ மொழிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சனி கிரகத்தில் உப்பு நீர் ஏரி! ஜேர்மன் விஞ்ஞானி கண்டுபிடிப்பு


german_scn

Monday, June 27, 2011  .சனி கிரகத்தில் உப்பு நீர் ஏரி இருப்பதாக ஜேர்மன் ஹெய் டெல்பெர்க் பல்கலைக்கழக வானவியல் விஞ்ஞானி பிராங்க் போஸ்ட் பெர்க் தெரிவிக்கின்றார்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சனி கிரகத்தில் உள்ள என்செலாடஸ் என்ற சந்திரனில் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு வெந்நீர் ஊற்றுகளும் ஐஸ் கட்டிகளும் இருப்பதை கண்டறிந்தனர்.

Monday, June 27

ஜூலை முதல் வெளிச்செல்லும் அழைப்பொன்றிற்கான நிமிடக் கட்டணம் குறைப்பு

வெளிச்செல்லும் அழைப்பொன்றிற்கான நிமிடக் கட்டணம் குறைப்பு


June 27, 2011  03:55 pm

ஒரு வலையமைப்பிலிருந்து பிறிதொரு வலையமைப்புக்கான வெளிச்செல்லும் அழைப்பொன்றிற்கான நிமிடக் கட்டணம் ஜூலை முதலாவது வார காலப்பகுதியில் இருந்து 2 ரூபாவிலிருந்து 1 ரூபா 50 சதமாக குறைக்கப்பட்டவுள்ளதாக இலங்கை தொலைத் தொடர்புகள் ஓழுங்குபடுத்து ஆணைக்குழு பணிப்பாளர் நாயகம் அனுச பல்பித்த தெரிவித்துள்ளார்.

சுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும் - விஷேட ஆய்வுக் கட்டுரை

Sunday, June 26, 2011

டாக்டர் A. ஷேக் அலாவுதீன்
MD. (Chin.Med), A.T.C.M (CHINA)
Zhejiang University, Hangzhou, (China)
(Chinese Traditional Medicine).

சுமார் 30, 40 வயது நிரம்பிய பலரை விசாரித்து பாருங்கள்இ அவர்கள் பெரும்பாலும் சுகப்பிரசவம் ஆனவர்களாகவும் அதிலும் வீட்டிலேயே பிறந்தவர்களாக இருப்பார்கள். வீட்டிலேயே பிறந்த பலருக்குஇ அவர்கள் பிரசவத்திற்கு உறுதுணையாக இருந்தவர்கள் தமது அக்கம்பக்கத்து வீட்டுகாரர்களே! சில ஊர்களில் படிக்காத வயதான அனுபவமிக்க மூதாட்டிகளே உதவி செய்திருப்பார்கள். இப்படித்தான் பல்லாயிரக்கணக்கான பிரசவங்கள் அன்று கத்தியின் சுவடுயின்றி பிறந்தன. ஆனால் இன்றைய நவீன உலகில் சுகப்பிரசவம் என்பது அறிதான ஒன்றாகிவிட்டது. படிக்காதவர்கள்
பாமரர்கள் எல்லாம் சுகப்பிரசவம் செய்தபோது அதிகம் படித்த அறிவாளிகள்(?)இ வெளிநாடு சென்று சிறப்பு பட்டம் பெற்றவர்கள் எல்லாம் சிசேரியன் அதிகம் செய்கின்றார்களே ஏன்?


வீடு பற்றும் போது பீடிக்கு நெருப்பு கேட்ட கதை :கோத்தபாயவின் மகனுக்கு திருமணம்! இரண்டு கொள்கலன்களில் ரோஜாப்பூ


[ திங்கட்கிழமை, 27 யூன் 2011, 02:27.30 AM GMT ]
இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் நந்தசேன கோத்தபாய ராஜபக்சவின் மகனது திருமணம் எதிர்வரும் 30 ம் திகதி நடைபெறவுள்ளது. இந்தத் திருமணத்துக்காக நெதர்லாந்தில் இருந்து பாரிய இரண்டு கொள்கலன்களில் ரோஜாப்பூக்கள் தருவிக்கப்பட்டுள்ளன.

Sunday, June 26

தொப்பி அணிந்த விண்ணப்பங்களை நிராகரித்தமை அடிப்படை மனித உரிமை மீறல் : நீதியமைச்சர்

 
தொப்பி அணிந்து விண்ணப்பிக்கப்பட்ட அடையாள அட்டை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமை அடிப்படை மனித உரிமை மீறல் என்று நீதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய அடையாள அட்டை பெறுவதற்காக தொப்பி அணிந்த நிலையில் மாகோள அனாதை இல்ல மாணவர்கள் சமர்ப்பித்த விண்ணபங்கள் நிராகரிக்கப் பட்டமை தொடர்பாக நீதியமைச்சர் ரவூப் ஹகீம் ஆட்பதிவு திணைக்களப் பணிப்பாளருக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

வட்டியிலும் இலங்கை சாதனை -ஹம்பாந்தோட்டை துறைமுக கடனுக்காக 1110 கோடி ரூபா வட்டி


ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டத்திற்காக சீனாவிடமிருந்து வாங்கிய கடனுக்கு இலங்கை அரசாங்கம் 111.21 மில்லியன் அமெரிக்க டொலர்களை  அதாவது சுமார் 11.1 பில்லியன் (1110 கோடி) ரூபா வட்டியாக செலுத்த வேண்டியிருப்பதாக அரசாங்கம் இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளது.

பிந்திய செய்தி -அமெரிக்க நீதிமன்றுக்குப் பதிலளிக்கத் தயாராகும் மஹிந்த


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றமொன்றில் தொடரப்பட்ட வழக்குக்கு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ள இந்நிலையி்ல் அந்நீதிமன்றுக்கு பதிலளிக்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாகத் தெரியவருகிறது.


முதலில் அந்நீதிமன்ற நடவடிக்கைக்குப் பதிலளிக்கப் போவதில்லை எனத் தெரிவித்திருந்த அரசாங்கம் இப்போது அதற்குப் பதிலளிக்க முடிவு செய்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைக்கவுன்சிலின் அடுத்த அமர்வில் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை?- தமிழ்வின்


ஐ.நா. மனித உரிமைக்கவுன்சிலின் அடுத்த அமர்வில் இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம் என்று தெரிய வருகின்றது.
அண்மையில் நிறைவுற்ற ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடையை பிரேரிப்பதற்கு பல நாடுகள் தயாராக இருந்த போதும், பல்வேறு காரணங்களால் அதனை நிறைவேற்றிக் கொள்ள முடியாது போயுள்ளது.

பொருட்களின் இருப்பிடத்தை அறிவதற்கான மின்னணு பொறிமுறை ஒன்றை இலங்கைத் தமிழ் விஞ்ஞானி கண்டு பிடிப்பு

பொருட்களின் இருப்பிடத்தை அறிவதற்கான மிகவும் மலிவான புதிய மின்னணு பொறிமுறை ஒன்றை தமிழ் விஞ்ஞானி ஒருவர் இங்கு பிரிட்டனில் கண்டுபிடித்திருக்கிறார்.

பிரிட்டனின் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவரானஇ இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட டாக்டர். சிதம்பரநாதன் சபேசன் அவர்களே இந்தக் கண்டுபிடிப்பை செய்திருக்கிறார்.

Friday, June 24

புதிய அரசியல் பிரவேசங்கள்: சில ஆலோசனைகள் - உஸ்தாத் எம்.ஏ.எம்.மன்சூர்




 








இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் முஸ்லிம் காங்கிரஸ் ஒரு மிக முக்கியமான மைற்கல். எனினும் அரசியற் கொள்கை சம்பந்தமான தெளிவு இல்லாமையாலும், அரசியற் போராட்ட ஒழுங்கு, உத்திகள் பற்றி திட்டமிடப்பட்ட வரைபு இல்லாமையாலும், முன்னணிப் போராளிகளோ, அடிமட்டத்தினரோ நன்கு பயிற்றுவிக்கப்படாமையாலும் அது முஸ்லிம் அரசியல் வரலாற்றின் திருப்புமுனையாக அமைய முடியாமல் முடங்கித்தேங்கிப் போய் பாரம்பரிய முஸ்லிம் அரசியற் போக்குக்கே மீண்டு சென்று விட்டது.

ஈரான் தேசிய விமான நிறுவனம் மீது அமெரிக்கா பொருளாதார தடை

iranஜூன் 24, 2011 : ஈரானின் தேசிய விமான நிறுவனம் மீது  அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈரானின் இராணுவத்துக்கு குறித்த விமான சேவைகள் நிறுவனம் உதவிகளை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டே இந்த தடை விதிக்கப்பட்டடுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் ஈரானின் துணை இராணுவத்துக்கு இந்த விமான சேவைகள் நிறுவனம் பல்வேறு உதவிகளை வழங்குகின்றமை தெரியவந்துள்ளதாக குறிப்பிடுகிறது.
இந்த துணை இராணுவக் குழுவினர் பயங்கரவாத நடவடிக்ககையில் ஈடுபடுவதாகவும், மனித உரிமைகளை மீறுவதாகவும் அமெரிக்க குற்றஞ்சுமத்தியுள்ளது.
1995 ஆம் ஆண்டு முதல் ஈரானின் விமான சேவைகளுக்கு அமெரிக்க தடைகளை வித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விண்டோஸ் 8: புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஓர் அறிமுகம். (கானொளி இணைப்பு)


தன் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 8 எப்படி இருக்கப்போகிறது என மைக்ரோசாப்ட் நிறுவனம், அண்மையில் நடைபெற்ற தொழில் நுட்பக் கருத்தரங்குகளில் தெரிவித்துள்ளது.
தைபே நாட்டில் இது குறித்து உரையாற்றிய மைக்ரோசாப்ட் வல்லுநர் மைக்கேல் உறுதியான சில அம்சங்கள் குறித்து கூறியுள்ளார்.
தொழில் நுட்பத்தின் அடிப்படையில் பார்க்கையில், விண்டோஸ் 8, குறைந்த மின்சக்தியில் இயங்கும் ஏ.ஆர்.எம். சிப்களில் செயல்படக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது.

நோயாளிகளிடம் 20 ரூபா அறவிட வேண்டும்: மருத்துவ அதிகாரி- தமிழ் மிரர்

அரசாங்க வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் 20 ரூபா கட்டணம் அறவிட வேண்டும் என அரசாங்க மருத்துவ அதிகாரியொருவர் ஆலோசனை  கூறியுள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் ஏனைய பொது வைத்தியசாலைகளிலும் வெளிநோயாளர் பிரிவில் கடும் நெரிசல் காணப்டுவது குறித்து கருத்துத் தெரிவித்த மேற்படி மருத்துவர், சிறிய வருத்தங்களுக்குகூட மக்கள் அரசாங்க வைத்தியாலைக்கு வருகிறார்கள். ஏனெனில் மருந்துகள் இலவசமாக கிடைக்கின்றன என தெரிவித்துள்ளார்.
"மருத்துவர்களால் சிபாரிசு செய்யப்பட்டு, வைத்தியசாலைகளில் இலவசமாக வழங்கப்படும் மருந்துகள் முழுமையாக பயன்படுத்துவதுமில்லை. அரைப்பங்கிற்கும் அதிகமான மருந்துகள் வீணாக்கப்படுகின்றன. நாட்டிலுள்ள எந்த வீட்டை சோதித்தாலும் மருத்துவ நிலையங்களில் பெறப்பட்டு, பயன்படுத்தப்படாது ஒதுக்கப்பட்ட மருந்துகளை காணமுடியும். ஆதிகமான மக்கள் இலவச மருந்துகளைப் பெறுவதற்காக வைத்திசாலைகளுக்கு செல்கின்றனர். இது ஒரு வழக்கமான 'வீடு செல்லும்போது' நடவடிக்கையாக மாறியுள்ளது என தன்னை இனங்காட்ட விரும்பாத மேற்படி மருத்துவர் தெரிவித்துள்ளார்.

பான் கீ மூனை வாழ்த்தும் நாடுகளில் சிறிலங்கா முன்னணியில்...!


சிறிலங்கா அரச தலைவர்கள் மற்றும் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் பிற கட்சி உறுப்பினர்கள் கடந்த ஒரு வருட காலமாக ஐக்கிய நாடுகள் (ஐநா) சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூனை அவதூறாக பேசி வந்தார்கள்.
பல காலமாக சிறிலங்காவின் உற்ற நண்பனாக இருந்த மூனை கடந்த ஒரு வருடமாக இழிவாக வர்ணிக்க காரணம் என்னவெனில் அவர் மூவர் அடங்கிய விசாரணைக் குழுவை நியமித்ததுதான். சிறிலங்கா அரச தலைவர்கள் ஐநாவின் மூவர் அடங்கிய குழுவின் அறிக்கையை தொடர்ந்தும் ஏற்க மறுப்பதுடன், அப்படியான குற்றம் எதனையும் தமிழருக்கெதிராக செய்யவில்லையென்று முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் வகையில் சிங்கள ஆட்சியாளர்கள் கூறிவருகிறார்கள்.
தானும் மேற்கத்தைய நாடுகளின் ஆதரவை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்கிற வகையில் சேவைகளை செய்கிறார் பான் கீ மூன். சிறிலங்கா அரசிற்கும், மேற்கத்தைய நாடுகளின் அழுத்தங்களிற்கும் மத்தியில் படாதபாடு பட்டுக்கொண்டு இருக்கிறார் மூன். இரு சாராரையும் சாந்தப்படுத்த பல இன்னல்களை மூன் தொடர்ந்தும் சந்திக்கிறார் என்பது மட்டும் தெளிவாகப் புரிகிறது.
சிறிலங்காவுக்கு எதிராக எந்தவொரு சர்வதேச விசாரணைக் குழுவையும் அமைக்கக்கூடாது என்று கூறிவருகிறது சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள். இவ் நாடுகள் அனைத்துமே பான் கீ மூனுக்கு தொடர்ந்தும் ஆதரவாக இருக்கின்றன.

தேசிய கல்வியியற் கல்லூரிக்கான விண்ணப்பங்கள் -2012

தேசிய கல்வியியற் கல்லூரிக்கான விண்ணப்பங்கள் -2012  இன்றைய வர்த்தமானியில் கோரப்பட்டுள்ளன. தகைமை உடையவர்கள் விண்ணப்பிக்கவும் .
லிங்க் :  http://www.dailynews.lk/2001/pix/GazetteT11-06-24.pdf



எனது உயிரிலும் இரத்தத்திலும் மஹிந்த சிந்தனை கலந்துள்ளது - மேர்வின் சில்வா


மஹிந்த சிந்தனையானது எனது உடலிலும் உயிரிலும் கலந்திருக்கின்றது. அதனால்தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எனக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பொறுப்பினை வழங்கியிருக்கின்றார். மஹிந்த சிந்தனையானது எனது உடலில் ஓடும் இரத்தத்திற்கு சமனானது என்று அமைச்சர் மேர்வின் சில்வா நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அமரர் டி.பி.விக்கிரமசிங்க, அமரர் ஹெரி அபேதீர மற்றும் அமரர் மெல் பர்ணாந்து ஆகியோர் மீதான அனுதாப பிரேரணை மீது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் மேர்வின் இங்கு மேலும் கூறுகையில்,
ஐக்கிய தேசியக் கட்சி தற்போது உள்வீட்டு பிரச்சினைகளால் அவதிப்படுகின்றது. அந்தக் கட்சிக்கு தேவைப்படும் பட்சத்தில் மஹிந்த சிந்தனையில் ஒரு துளியை தருகின்றேன்.
அதன்மூலம் உங்களது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும். முன்னாள் எம்.பி. ஹெரி அபேதீர எந்தச் சந்தர்ப்பத்திலும் தனது கட்சியையோ அல்லது தலைவரையோ காட்டிக் கொடுக்கவில்லை.
அதேபோல் நாம் எமது கட்சியையோ எமது தலைவரையோ காட்டிக்கொடுப்பவரல்ல. எனது உயிருடன் மஹிந்த சிந்தனை கலந்திருக்கிறது. எனது இரத்தத்துடன் மஹிந்த சிந்தனை ஓடுகின்றது. இதனையறிந்துதான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எனக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பொறுப்பினை வழங்கியிருக்கின்றார் என்றார்.

தமிழ்மொழியில் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9




மைக்ரோசோப்ட் நிறுவனம் புதிதாக இண்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9-ஐ தமிழ் மொழியில் வெளியிட்டுள்ளது மைக்ரோசோப்ட் நிறுவனம் இந்தி, அசாமீஸ், வங்காள மொழி, குஜராத்தி ,கன்னடம், மலையாளம், மராத்தி, ஓரியா, பஞ்சாபி, தெலுங்கு உள்ளிட்ட 53 மொழிகளில் தனது பிரவுசரை வடிவமைத்துள்ளது.

பல இன மக்களிடையே தன் நிறுவனத்தின் பிரவுசரை வெளியிட்டதன் மூலம் அனைத்துத் தரப்பு மக்களிடமும் தனது சாதனங்களை கொண்ட செல்ல முடிவதாகக் கூறியது.  மைக்ரோசோப்ட் நிறுவனம் தமிழ் மொழியில் தனது பிரவுசரை வெளியிட்ட போது, இந்தியாவில் பிரபலமான 29 இணைய தளங்களுடன் ஒப்பந்தம் கொண்டிருந்தது. ஏனெனில், இண்டர்நெட் எக்ஸ்ப்லோரர் பதிப்பு 9-ஐ விளம்பரப்படுத்த இது உக்தியாக விளங்கும் என்பதால் அவ்வாறு செய்யப்பட்டது.
தமிழ் மற்றும் பிர மொழிகளில் இண்டர்நெட் எக்ஸ்ப்லோரர் பிரவுசரை நமது கணினியில் இயக்க http://windows.microsoft.com/en-US/internet-explorer/downloads/ie-9/worldwide-languages என்ற முகவரியை  தட்டி இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Thursday, June 23

மொழிபெயர்ப்பில் கூகிள் நிறுவனம் தமிழிலும் சாதனை! (பட இணைப்பு)


உலகில் 63 மொழியில் உள்ள  ஆக்கங்களை தமிழ் மொழியிலும் தமிழ் மொழியில் உள்ள ஆக்கங்களை 63 மொழிகளிலும் மொழிபெயர்பு செய்யும் வசதி உருவாகி உள்ளது.

கூகிள் நிறுவனத்தின் மொழி மாற்றம் செய்யும் பகுதியில் இதனை கூகிள் நிறுவனம் இணைத்துள்ளது.

தேசிய அடையாள அட்டைக்காக தொப்பி அணிந்த புகைப்படத்தை ஏற்க மறுப்பு



Wednesday, June 22

தேசிய கல்வியியல் கல்லூரிக்கு இம்முறை 3200 அனுமதி


தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 24ம் திகதி வெளியிடப்படவுள்ளது.

இதன்படி எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் மூன்று வார காலத்திற்குள் மாணவர்கள் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியுமென தேசிய கல்வியியற் கல்லூரி ஆணையாளர் திஸ்ஸஹேவா விதாரண
தெரிவித்துள்ளார்.

தெஹிவளை பாத்தியா மாவத்தை மஸ்ஜித் விவகாரம்


கொழும்பு தெஹிவளை கல்போவில பாத்தியா மாவத்தையில் அமைந்துள்ள மஸ்ஜித் விவகாரத்தை தெஹிவளை பெரியபள்ளி நிர்வாகம் கையாண்டு வருகின்றது, சமந்தப்பட்டவர்களுடன் பேசுவதுடன் அரசியல் வாதிகளுடனும் இது தொடர்பாக பேசிவருகின்றது தற்போது ஜமாஅத் தொழுகை நிறுத்தபட்டுள்ள நிலையில் கூட்டு தொழுகை இன்றி ஒவ்வொருவரும் தனித்தனியாக தொழுது வருமாறு கேட்கப்பட்டுள்ளனர் .

Tuesday, June 21

தோற்றுப் போன நாடுகளின் பட்டியலில் 29வது இடத்தில் இலங்கை




உலகில் தோற்றுப் போன நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 29வது இடம் வழங்கப்பட்டுள்ளது.

கௌரவமான வெளிநாட்டு கொள்கைகளுக்கான சஞ்சிகை இந்த பட்டியலை வெளியிட்டுள்ளதாக த டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் சூடான் முதலாவது இடத்தில் உள்ளது.

இதற்கிடையில் இந்த பட்டியலை வெளியிட்டுள்ள சஞ்சிகை, இந்தியா தமது அண்டைய நாடுகளை பாதுகாக்க தவறியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், மியன்மார், பங்களாதேஸ், பூட்டான், இலங்கை போன்ற நாடுகள் இந்த பட்டியலில் முதல் 50 நாடுகளுள் இடம்பெற்றுள்ளன.

வவுனியாவில் கடவுச்சீட்டு அலுவலகம்



 
 
 
6 வேலை  நாட்களுக்குள்  கடவுச்சீட்டு

வவுனியாவில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய காரியாலயமொன்றை விரைவில் ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

பேரின அச்சுறுத்தலினால் பாத்தியா மாவத்தை மஸ்ஜித் மூடப்பட்டுள்ளது !

கொழும்பு தெஹிவளை கல்போவில பாத்தியா மாவத்தையில் அமைந்துள்ள மஸ்ஜித் ஒன்றுக்குள் பெளத்த மதகுருமார்கள் சிலர் நுழைந்து அதனை மூடிவிடுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப் பட்டதால் மஸ்ஜித் நேற்று ஞாயிற்று கிழமையுடன் ஜமாஅத் தொழுகைகள் நடைபெறாது மூடப்பட்டுள்ளதாகவும் அந்த மஸ்ஜிதின் தினமும் தொழுகையில் ஈடுபட்டுவந்த நபர் முஹமத் lankamuslim.org க்கு தெரிவித்தார்.

Friday, June 17

காதுகள் இல்லாத முயல்: ஜப்பானில் மக்கள் பீதி

[ புதன்கிழமை, 15 யூன் 2011, 03:45.54 மு.ப GMT ]
ஜப்பானில் புகுஷிமா அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு ஏற்பட்ட பின் கடந்த மாதம் காதுகள் இல்லாமல் ஒரு முயல் பிறந்துள்ளதாக செய்திகள் படத்துடன் வெளியாயின.
இதனால் ஜப்பானில் மக்கள் மத்தியில் கதிர்வீச்சு குறித்த பீதி அதிகரித்துள்ளது. ஜப்பானின் புகுஷிமா டச்சி அணுமின் நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியை அடுத்து கதிர்வீச்சு உருவானது.
அணுமின் நிலையத்தைச் சுற்றி 50 கி.மீ பரப்பளவுக்கு வசித்து வந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். எனினும் ஒரு சிலர் அந்த பரப்பளவில் இன்னும் வசித்து வருகின்றனர்.
அணுமின் நிலையத்தில் இருந்து 29 கி.மீ தொலைவில் உள்ள நாமியீ என்ற சிறிய நகரில் வசித்து வரும் யுகோ சுகிமோட்டோ என்ற பெண்ணின் வீட்டில் கடந்த மே மாதம் 7ம் திகதியன்று காதுகள் இல்லாமல் ஒரு முயல் பிறந்துள்ளது.
அதோடு அல்பினிசம்(வெண்தோல் நோய்) என்ற நோய் காரணமாக அதன் கண்கள் மிகவும் சிவந்து காணப்படுகின்றன. மரபணுக்களில் சிதைவு ஏற்பட்டால் தான் அல்பினிசம் போன்ற நோய்கள் வரும்.
இதுகுறித்து சுகிமோட்டோ கூறியதாவது: நான் கடந்த 10 ஆண்டுகளாக முயல் வளர்த்து வருகிறேன். ஆனால் இப்போது தான் முதன் முறையாக இதுபோன்று காதுகளே இல்லாமல் ஒரு முயல் பிறந்துள்ளது. இந்தப் பகுதியில் விளையும் காய்கறிகளை அதற்கு நான் கொடுப்பதில்லை. அந்த முயல் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறது.
முயல் குறித்த செய்திகள் படத்துடனும், வீடியோவுடனும் வெளியான பின் ஜப்பானில் கதிர்வீச்சு குறித்த பீதி மேலும் அதிகரித்துள்ளது. ஆனால் இதுபோன்ற குறைபாடுகளுடன் மிக அரிதாக விலங்குகள் பிறப்பது இயற்கை தான். கதிர்வீச்சுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று நிபுணர்கள் சிலர் கூறியுள்ளனர்.
அதேநேரம் நேற்று டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி(டெப்கோ)வெளியிட்ட செய்திக் குறிப்பில் அணுமின் நிலையத்தின் அருகில் உள்ள கடல் நீரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 240 மடங்கு கதிர்வீச்சு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அணுமின் நிலையத்தின் அருகில் நிலத்தடி நீரில் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட "ஸ்ட்ரோன்டியம்" என்ற வேதியியல் தனிமம் கலந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட இத்தனிமம் உடலில் கலந்தால் எலும்பு புற்றுநோய் மற்றும் ரத்தப் புற்றுநோயை ஏற்படுத்தும். டெப்கோவின் இந்த அறிவிப்பும் காதுகள் இல்லாத முயல் பிறந்ததும் தற்போது ஜப்பானில் மக்கள் மத்தியில் கதிர்வீச்சால் ஏற்படும் அபாயங்கள் பற்றிய பீதியைக் கிளப்பி விட்டுள்ளன.

குரங்கை விண்வெளிக்கு அனுப்பி சோதனை செய்யும் ஈரான்

[ வெள்ளிக்கிழமை, 17 யூன் 2011, 06:29.18 மு.ப GMT ]

ராசாத்-1 என்ற செயற்கைகோளை ஈரான் தயாரித்துள்ளது. இதை மலேக் ஆங்தார் பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ளது.
இந்த செயற்கைகோள் கவோஸ்கர்-5 என்ற ராக்கெட் மூலம் வருகிற ஜூலை 23ந் திகதிக்கும், ஆகஸ்டு 23ந் திகதிக்கும் இடையே விண்வெளியில் செலுத்தப்பட உள்ளது.
இந்த செயற்கைகோளை கடந்த பெப்பிரவரி மாதம் ஈரான் அதிபர் மகமூத் அகமதின் ஜாதி அறிமுகப்படுத்தினார். 285 கிலோ எடையுள்ள இந்த செயற்கைகோளில் ஆராய்ச்சிக்காக குரங்கை வைத்து அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கு தகுந்தாற்போல் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. வருகிற 2020ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதனை அனுப்ப ஈரான் முடிவு செய்துள்ளது. அதற்கு முன்னதாக விலங்குகளை அனுப்பி ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த ஆண்டு எலி, ஆமைகள், மற்றும் புழு, பூச்சிகளை கவோஸ்கர்-3 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக தற்போது குரங்கு அனுப்பப்பட உள்ளது.
இந்த தகவல் ஈரான் அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு டெலிவிஷன் தெரிவித்தது.

மணிக்கு 270 கிலோமீற்றர் வேகத்தில் பறக்கும் மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு


Friday, June 17, 2011
வானத்தில் சுமார் 10 ஆயிரம் அடி உயரத்துக்கு மேலே பறக்கும் பைக்கை ஆஸ்திரேலியாவை சேர்ந்த இன்ஜினியர் உருவாக்கி இருக்கிறார். ஆஸ்திரேலியாவின் நார்த் ரைடு பகுதியை சேர்ந்த இன்ஜினியர் கிரிஸ் மல்லாய். இவர் தரையில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் புதுவகை பைக் ஒன்றை தயாரித்து உள்ளார்.

ஒருவர் மட்டுமே உட்காரும் வகையில் பைக்கை வடிவமைத்துள்ளார். பைக்கின் முன், பின் பக்கங்களில் மரத்தால் செய்யப்பட்ட 2 பெரிய இறக்கைகள் உள்ளன. மற்ற பகுதிகள் கார்பன் இழைகளால் உருவாக்கப்பட்டுள்ளன. 1170 சிசி திறன் கொண்ட 4 ஸ்டிரோக் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

பைக் எடை 110 கிலோ. மணிக்கு 270 கி.மீ. வேகத்தில் செல்லும். அவசர நிலையில் தரையிறங்க பைக்கில் 2 பாராசூட்களும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த பைக்கை ராணுவம், மீட்பு நடவடிக்கைகள், வனவியல் பூங்கா சுற்றுலா, சினிமாக்களில் பயன்படுத்தலாம் என்கிறார் மல்லாய். பைக் குறித்த வீடியோ காட்சியையும் அவர் வெளியிட்டுள்ளார். பைக் விலை ரூ.20 லட்சம். விரைவில் விற்பனைக்கு வரும் என்றும் அறிவித்துள்ளார்.


4000 ஆசிரியர் பதவிகளுக்கு பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படும்





(கெலும் பண்டார)
4000 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளிடமிருந்து கல்வியமைச்சு விண்ணப்பங்களைக் கோரவுள்ளது. எதி;ர்வரும் ஞாயின்று இவ்விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.
ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம், விஞ்ஞானம், கணிதம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்களாக 3000 பட்டதாரிகள் சேர்க்கப்படவுள்ளதாகவும் மேலும் 1000 பேர் அதிபர்களாக நியமிக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தமிழ் மிரரின் சகோதர ஊடகமான டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.
1000 பாடசாலைகள் திட்டத்தின்கீழ் நவீனமயப்படுத்தப்படும் பாடசாலைகளுக்கு மேற்படி 4000 ஆசிரியர்களும் அதிபர்களும் நியமிக்கப்படுவர் எனவும் அவர் கூறினார்.

லிங்க்: http://www.moe.gov.lk/web/images/stories/news/tamil.pdf
 http://www.moe.gov.lk/web/images/stories/news/english.pdf



அரபு நாடுகளுக்கு ஆதரவாக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு





ஏகாதிபத்தியவாதிகளினால் அரபு நாடுகள் மீது மேற்கொண்டு வரும் மனிதாபிமானமற்ற படுகொலைகளுக்கு எதிராகவும், அந்நாடுகளின் வளங்களையும், பொருளாதார சுரண்டல்களையும் தடுக்கும் வகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் ஜூம்ஆ பிரார்த்தனைக்குப் பின்னர் பிற்பகல் 1.30 மணிக்கு மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி மேல்மாகாண ஆளுநர் அல்ஹாஜ் அலவி மெளலான தலைமையில் நடைபெறவுள்ளது.

அமெரிக்கா உலகத்தின் பொலிஸ்காரர் என்ற மமதையில் அப்பாவி அரபு நாடுகளை செய்த கொடுமைகளால் இன்று ஈராக் ஒரு யுத்தகளமாக மாறியிருக்கிறது. மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளில் அமைதியின்மைகளும், வன்முறைகளும் தலைதூக்கியிருக்கின்றது.

சதாம் ஹ¥சைனின் மகன்மாரை படுகொலை செய்து இறுதியில் சதாம் ஹசைனை தூக்கிட்டதைப் போன்று யதார்த்தவாதியான லிபியத் தலைவர் கடாபியை அழித்துவிடுவதற்கு அமெரிக்கா இன்று சதித்திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவின் தான்தோன்றித்தனமான முஸ்லிம் உலகை அழிக்கும் சதித்திட்டத்தைப் பார்த்து உலக நாடுகள் இனிமேலும் கைக்கட்டி மெளனம் சாதிக்கக் கூடாது. அவ்விதம் செய்தால் உலகில் ஜனநாயகமும் நீதி நியாயமும் அமெரிக்காவினால் குழிதோண்டிப் புதைக்கப்படும் என்று தெரிவித்தார்.

இலங்கை மக்களும் இனிமேலும் மெளனம் சாதித்தால் அமெரிக்க ஆக்கிரமிப்பு எங்கள் நாட்டையும் விட்டுவைக்கப் போவதில்லை என்று எச்சரிக்கை விடுத்தார். எனவே வெள்ளிக்கிழமை நடைபெறும் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ள வேண்டுமென மேல் மாகாண ஆளுநர் வேண்டுகோள் விடுத்தார். ஆளுநர் பணிமனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேல் மாகாண ஆளுநர் இதனைத் தெரிவித்தார்.

சர்வ மதத்தலைவர்களின் அனுசரணையின் கீழ் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இன, மத, கட்சி பேதமின்றி சகலரையும் கலந்து கொள்ளுமாறு தேசிய ஐக்கியத்திற்கான தலைவரும், சப்ரகமுவ பல்கலைக்கழக வேந்தர் சங்கைக்குரிய கும்புறுகமுவ வஜிர நாயக்கத் தேரர் அழைப்பு விடுத்தார்.

ஐக்கிய நாடுகள் சபை சமாதானத்திற்கு உருவாக்கப்பட்ட அமைப்பாகும். எனினும் அமெரிக்காவின் கைம்பொம்மையாக ஐக்கிய நாடுகள் செயற்படுவதானது ஏகாதிபத்தியவாதிகளுக்கு துணையாக இருப்பது வேதனையளிக்கிறது. சமாதானத்தை ஏற்படுத்த வேண்டிய இவர்கள் உலக நாடுகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து அந்நாடுகளின் சொத்துக்களையும், சிறுபிள்ளைகளையும் கொன்று குவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான், ஈராக், எகிப்து, மற்றும் லிபியா நாடுகள் மீது மேற்கொண்டுவரும் மனிதாபிமானற்ற படுகொலைகளை நிறுத்த வேண்டும். அமெரிக்கா மேற்கொண்டு வரும் முஸ்லிம் நாடுகளை அழிக்கும் இனவிரோத செயற்பாட்டுக்கு எதிராக நாம் கிளர்ந்தெழ வேண்டுமென சங்கைக்குரிய கும்புறுகமுவ வஜிர நாயக்கத் தேரர் கேட்டுக் கொண்டார்.

ஹசன் மெளலானா உரையாற்றும் போது, இன்று மத்தியகிழக்கிலுள்ள முஸ்லிம் நாடுகள் ஒற்றுமையிழந்து காணப்படு கின்றமை அமெரிக்காவின் ஏகாதிபத்தியம் தலைதூக்க காரணமாக இருக்கின்றது. அரபு நாடுகள் ஒன்றுபடும் போது அமெரிக்காவின் அகங்காரத்தை முற்றாக ஒழிக்க முடியும். அத்துடன் உலக பொலிஸ்காரன் என்ற கெளரவத்தை ஒடுக்க முடியும்.

அமெரிக்கா தற்போது லிபியாவில் மேற்கொண்டு வரும் இனப்படுகொலையை முற்றாக எதிர்க்க வேண்டும். இன்று லிபியா நாளை இலங்கையாக கூட இருக்கலாம். எனவே இவர்களின் அடாவடித்தனத்திற்கு எதிராக முஸ்லிம்கள் மாத்திரமின்றி அனைவரும் இன, மத, கட்சி பாராமல் கலந்து கொள்ள வேண்டும்

Thursday, June 16

பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது!



india_shipதூத்துக்குடியிலிருந்து கொழும்பை நோக்கி புரப்பட்ட பயணிகள் கப்பல்  நேற்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
தூத்துக்குடி - கொழும்பு இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து  இந்திய கப்பல்
போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜீ.கே வாசனால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
பயணிகள் 121 பேர் மற்றும் நல்லெண்ண தூதுவர்கள் 80 பேர் என மொத்தம் 201 பேர் கொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்தனர்.
1980 ஆம் ஆண்டுக்குப் பிறகு நிறுத்திவைக்கப்பட்டிருந்த கப்பல் போக்குவரத்து இப்போது மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
வழமையாக இராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்குத்தான் பயணிகள் கப்பல் செல்லும். ஆனால் இப்போது தூத்துக்குடியிலிருந்து கொழும்பிற்கு இயக்கப்படுகிறது.

Tuesday, June 7

சாதாரண தரம் கூட சித்தியடையாமல் 20 வருடம் சிகிச்சை அளித்த வைத்தியர் கண்டியில் கைது


June 7, 2011  01:51 pm
சாதாரண தரம் கூட சித்தியடையவில்லை: 20 வருடம் சிகிச்சை அளித்த வைத்தியர் கண்டியில் கைதுBookmark and Share
தகுதியுடைய வைத்தியர் பட்டத்தை போலியாகப் பெற்று கண்டி நகரில் வைத்திய மத்திய நிலையமொன்றை நடத்திவந்த போலி வைத்தியர் ஒருவர் கண்டி குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி நகரில் பல வருட காலங்களாக குறித்த நபர் வைத்திய மத்திய நிலையத்தை நடத்தி வந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த வைத்திய நிலையம் முற்றுகையிடப்பட்ட போது அங்கு போலியான வைத்தியப் பட்டம் பெற்ற புகைப்படம் தொங்கவிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட வைத்தியர் சுமார் 20 வருட காலங்களாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததோடு சிகிச்சை அளித்ததற்கான வைத்திய சான்றிதழையும் வழங்கி வந்துள்ளார்.

எனினும் இவர் இலங்கை வைத்தியர் சபையிலோ அல்லது தனியார் வைத்திய சபையிலோ பதிவு செய்யப்பட்டவர் அல்ல என தெரியவந்துள்ளது.

விசாரணைகளின் பின்னர், குறித்த போலி வைத்தியர் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில்கூட சித்தியடைவில்லை என தெரியவந்துள்ளது.

குறித்த போலி வைத்தியர் பலருக்கு சிகிச்சை அளித்துள்ளதோடு சத்திரசிகிச்சையும் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சுற்றிவளைப்பின் போது வைத்திய உபகரணங்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளதுடன், வைத்தியருக்கு உதவியாகப் பணிபுரிந்த இரு யுவதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராசிபலன் பார்க்க சென்ற பெண்ணுக்கு காமப்படம் காட்டிய பூசகர் சிறையில் !

இராசிபலன் பார்க்க சென்ற பெண்ணுக்கு காமப்படம் காட்டிய பூசகர் சிறையில் !


June 7, 2011  11:37 am

இலங்கையைச் சேர்ந்த முன்னாள் பூசகர் ஒருவர் அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படலாம் என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

பிரேம்காந்தன் ராஜரட்ணம் சர்மா எனும் குறித்த பூசகர் கெறும் டவுன்ஸ் என்ற பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலயத்தில் பணிபுரியும் போது, ஜூலை 12ம் திகதி 2004ம் ஆண்டு 23 வயதுடைய பெண்ணொருவரை தவறான முறையில் அணுக முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

நாட்டில் 12 ஆயிரம் போலி டாக்டர்கள் . எச்சரிக்கை : விடிவெள்ளி செய்தி


பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் எச்சம் வடமராட்சியில் கண்டுபிடிப்பு

இலங்கையில்  ஆறு அல்லது ஏழு இலட்சம் வருடங்களுக்கு முன் வாழ்ந்ததாக கருதப்படும் ஹோமோ இரெக்டஸ் வர்க்க மனிதனின் எச்சம் வடமராட்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் கற்காலத்துக்கு முந்திய (lower paleoloithic) காலத்து மனிதன் இலங்கையில் வாழ்ந்திருப்பதற்கான உறுதியான தடயமாக அதனைக் கொள்ள முடியும் என்று தொல்பொருளியல் ஆராய்ச்சித் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன் ஹோமோ இரெக்டஸ் வர்க்க மனிதன் இலங்கையில் வாழ்ந்திருந்ததற்கான உறுதியான தடயம் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதற்தடவையாகும் விரிவாக
கற்காலத்துக்கு முந்திய காலத்து மனிதன் பயன்படுத்தியதாக கருதப்படும் கற்கோடாரிகள் சில வடமராட்சியில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதையடுத்தே தொல்பொருளியலாளர்கள் மேற்கண்ட அறிவித்தலை விடுத்துள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்டுள்ள கற்கோடாரியானது ஆச்சூலியன் ஆயுத கலாசாரத்தைச் சோ்ந்தவையாகும் என்றும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர் என்று யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றது

Monday, June 6

அதிர்ச்சி தகவல் :தடைசெய்யப்பட்ட இரசாயனங்களை கொண்ட பூச்சிநாசினி மருந்து இலங்கை சுங்கத்தால் பறிமுதல்


(
பூச்சிநாசினி கட்டுப்பாட்டுச் சபையால் தடைசெய்யப்பட்ட இரசாயனங்களை கொண்டுள்ள ஒரு தொகுதி மருந்தை இலங்கை சுங்கம் கைப்பற்றியுள்ளது.

ஆறு பல்தேசிய விவசாய இரசாயன கம்பனிகளால் இறக்குமதி செய்யப்பட்ட இந்த தொகுதியில் 400 பொதிகள் காணப்பட்டன. ஒவ்வொரு பொதியிலும் ஆசனிக் போன்ற தடைசெய்யப்பட்ட நச்சுப் பொருட்கள் 100 தொடக்கம் 500 மில்லி கிராம் வரை காணப்பட்டன.

கிளைகோ பொஸ்பேற் என்றும் றவுண்ட் அப் என்றும் வழங்கப்படும் இரசாயனப் பொருள் இதில் அதிகமாக காணப்பட்டது.

Saturday, June 4

வினோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள்(படங்கள் இணைப்பு)

கட்டிடக்கலை வல்லுநர்கள் பெருமளவில் கட்டிடங்களை வித்யாசமாக வடிவமைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டிவருகிறார்கள். அப்படி உலகிலுள்ள வினோதமாக வடிவமைக்கப்பட்ட கட்டிடங்களின் படங்கள் இதே உங்களுக்காக பார்த்து மகிழுங்கள்.



1. Mind House (Barcelona, Spain)

2. The Crooked House (Sopot, Poland)

3.. Stone House (Guimar�£es, Portugal
 


 4. Lotus Temple (Delhi, India) 


5. Cathedral of Brasilia (Brazil)
 


6. La Pedrera (Barcelona, Spain)


7.Atomium (Brussels, Belgium)  


8. Museum of Contemporary Art (Niteroi, Rio de Janeiro, Brazil)


9. Kansas City Library (Missouri, USA) 


 10. Low impact woodland house (Wales, UK)


11. Guggenheim Museum (Bilbao, Spain)


12. Rotating Tower, Dubai, UAE  



13. Habitat 67 (Montreal, Canada)

14. Casa da musica (Porto, Portugal)  



15. Olympic Stadium (Montreal, Canada)

16. The National Library (Minsk, Belarus)





17. National Theatre (Beijing, China)
 


18. Conch Shell House, Isla Mujeres, Mexico  



19. House Attack (Viena, Austria)
 



20. Bibliotheca Alexandrina (Egypt)


21. Cubic Houses (Kubus woningen) (Rotterdam, Netherlands)
 



22. Ideal Palace (France)  



23. The Church of Hallgrimur, Reykjavik, Iceland  



24. Eden project (United Kingdom)  



 25. The Museum of Play (Rochester , USA)


26. Atlantis (Dubai, UAE)


27. Montreal Biosphere (Canada)
 



28. Wonderworks (Pigeon Forge, TN, USA)  



29. The Basket Building (Ohio, USA)
 



30. Kunsthaus (Graz, Austria)


31. Forest Spiral (Darmstadt, Germany)  



 32. Wooden Gagster House (Archangelsk, Russia)