மைக்ரோசோப்ட் நிறுவனம் புதிதாக இண்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9-ஐ தமிழ் மொழியில் வெளியிட்டுள்ளது மைக்ரோசோப்ட் நிறுவனம் இந்தி, அசாமீஸ், வங்காள மொழி, குஜராத்தி ,கன்னடம், மலையாளம், மராத்தி, ஓரியா, பஞ்சாபி, தெலுங்கு உள்ளிட்ட 53 மொழிகளில் தனது பிரவுசரை வடிவமைத்துள்ளது.
பல இன மக்களிடையே தன் நிறுவனத்தின் பிரவுசரை வெளியிட்டதன் மூலம் அனைத்துத் தரப்பு மக்களிடமும் தனது சாதனங்களை கொண்ட செல்ல முடிவதாகக் கூறியது. மைக்ரோசோப்ட் நிறுவனம் தமிழ் மொழியில் தனது பிரவுசரை வெளியிட்ட போது, இந்தியாவில் பிரபலமான 29 இணைய தளங்களுடன் ஒப்பந்தம் கொண்டிருந்தது. ஏனெனில், இண்டர்நெட் எக்ஸ்ப்லோரர் பதிப்பு 9-ஐ விளம்பரப்படுத்த இது உக்தியாக விளங்கும் என்பதால் அவ்வாறு செய்யப்பட்டது.
தமிழ் மற்றும் பிர மொழிகளில் இண்டர்நெட் எக்ஸ்ப்லோரர் பிரவுசரை நமது கணினியில் இயக்க http://windows.microsoft.com/en-US/internet-explorer/downloads/ie-9/worldwide-languages என்ற முகவரியை தட்டி இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.