[ செவ்வாய்க்கிழமை, 28 யூன் 2011, 01:18.08 AM GMT ]
இந்த கோரிக்கை தொடர்பில் உச்ச நீதிமன்றம் விரைவில் ஆலோசனை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
உச்ச நீதிமன்ற நீதியரசர்களான நிமால் காமினி அமரதுங்க, சத்யா ஹெட்டிகே மற்றும் சுரேஸ் சந்திரா ஆகியோரினால் இந்த மனு தொடர்பிலான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
சுன்னாகம் உயர் நீதிமன்றில் ஆங்கில மொழியில் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்று தொடர்பில் எழுந்த சர்ச்சையே இவ்வாறு உச்ச நீதிமன்றிடம் ஆலோசனை கோருவதற்கான ஏதுவாக அமைந்துள்ளது.
இந்த மனுவை தமிழ் மொழியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் அல்லது மனுவை நிராகரிக்க வேண்டும் எனவும் பிரதிவாதி தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அரசியல் அமைப்பின் அடிப்படையில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment