Tuesday, June 28

மொழிப் பாகுபாடுகளுக்கு தண்டனை: உத்தியோகபூர்வ மொழிகள் ஆணைக்குழு




அரசாங்க நிறுவனங்களின் மொழி பாகுபாடு தொடர்பாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் கிடைத்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உத்தியோகபூர்வ மொழிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



அரசியலமைப்பின் நான்காம் சரத்தின்படி மொழி உரிமை மீறல் குறித்து எந்தவொரு தனி நபரோ நிறுவனமோ உத்தியோகபூர்வ மொழிகள் ஆணைக்குழுவிடம் புகாரிட முடியும் என அவ்வாணைக்குழுவின் செயலாளர் ஜே.வி. ரனேபுர  தெரிவித்தார்.
பொதுமக்கள் ஆவணங்கள், அறிவித்தல்கள், முதலாவற்றை எவ்வித சிரமுமின்றி வாசிப்பதற்கும் விளங்கிக்கொள்வறத்கும் உரிமையுள்ளவர்கள். மக்களின் இந்த உரிமையை உறுதிப்படுத்துவது அரசாங்க திணைக்களங்களினதும் ஏனைய பொது நிறுவனங்களினதும் கடமையாகும் என அவர் கூறினார்.
அனைத்து அரச திணைக்களங்களும் பொது நிறுவனங்களும் சகல ஆவணங்களையும் 3 மொழிகளிலும் அச்சிடுவவதற்கான புதிய விதிகள் அமுல்படுத்தப்படும் எனவும் இதை மீறுவோருக்கு 1000 ரூபா அபராதம் அல்லது 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் ரனேபுர கூறினார்.
பொதுமக்கள் இதுதொடர்பான புகார்கள் ஏதுமிருப்பின் 'பாஷா மந்திரிய, 341/7, கோட்டே வீதி, ராஜகிரிய எனும் முகவரிக்கு அனுப்பலாம் அல்லது olc@sltnet.lkolc@sltnet.lk இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it , எனும் மின்னஞ்சல் மூலம் அல்லது 0112871378  எனும் தொலைபேசி இலக்கத்தின் மூலம் புகார்களை தெரிவிக்கலாம் என அவர் கூறினார்.

No comments:

Post a Comment