Tuesday, June 28

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு நேரடியாக ஏவுகணைகளைச் ஏவக்கூடிய செலுத்திகளை அறிமுகப்படுத்தியது ஈரான்(காணொளி இணைப்பு) _



 
  ஈரான் முதன் முறையாக உந்து விசையின் மூலம் ஏவுகணைகளைச் ஏவக்கூடிய நிலக்கீழ் செலுத்திகளை (Silos) நிர்மாணித்துள்ளதாக நேற்று அறிவித்தது.

இந்நிலக்கீழ் அமைப்பின் மூலம் (silos) குறுந்தூர மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை இலகுவாக செலுத்த முடியுமென ஈரான் அறிவித்துள்ளது.


ஏவுகணைகளை செலுத்துவது மாத்திரமன்றி தயார் நிலையில் வைத்திருக்கக் கூடிய இவ்வமைப்பினை செய்மதிகள் கூட இனங்கண்டு கொள்ள முடியதென ஈரான் அறிவித்துள்ளது.



அங்கு ஆரம்பமாகியுள்ள இராணுவக் கண்காட்சியிலேயே இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஈரானின் அணுச் செறிவாக்கல் கட்டமைப்புக்களின் மீது அமெரிக்கா அல்லது இஸ்ரேல் போன்ற நாடுகள் தாக்குதல் நடத்த முற்படலாம் என்ற எதிர்பார்ப்பிலேயே ஈரான் இதனை நிர்மாணித்துள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

ஈரானிய தயாரிப்பான 'சஹாப்-3' ஏவுகணைகளை சுமார் 2000 கிலோமீற்றர் தொலைவு வரை ஏவக்கூடிய செலுத்திகளையும் அந்நாட்டு தேசிய தொலைக்காட்சிச் சேவை நேற்று ஒளிபரப்பியுள்ளது.

இது அமெரிக்க, இஸ்ரேல் மற்றும் ஐரோப்ப நாடுகளை தாக்கக்கூடிய வகையில் உள்ளதாக நம்பப்படுகின்றது. ___ E-mail to a friend  

No comments:

Post a Comment