கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் ஏனைய பொது வைத்தியசாலைகளிலும் வெளிநோயாளர் பிரிவில் கடும் நெரிசல் காணப்டுவது குறித்து கருத்துத் தெரிவித்த மேற்படி மருத்துவர், சிறிய வருத்தங்களுக்குகூட மக்கள் அரசாங்க வைத்தியாலைக்கு வருகிறார்கள். ஏனெனில் மருந்துகள் இலவசமாக கிடைக்கின்றன என தெரிவித்துள்ளார்.
"மருத்துவர்களால் சிபாரிசு செய்யப்பட்டு, வைத்தியசாலைகளில் இலவசமாக வழங்கப்படும் மருந்துகள் முழுமையாக பயன்படுத்துவதுமில்லை. அரைப்பங்கிற்கும் அதிகமான மருந்துகள் வீணாக்கப்படுகின்றன. நாட்டிலுள்ள எந்த வீட்டை சோதித்தாலும் மருத்துவ நிலையங்களில் பெறப்பட்டு, பயன்படுத்தப்படாது ஒதுக்கப்பட்ட மருந்துகளை காணமுடியும். ஆதிகமான மக்கள் இலவச மருந்துகளைப் பெறுவதற்காக வைத்திசாலைகளுக்கு செல்கின்றனர். இது ஒரு வழக்கமான 'வீடு செல்லும்போது' நடவடிக்கையாக மாறியுள்ளது என தன்னை இனங்காட்ட விரும்பாத மேற்படி மருத்துவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment