Tuesday, June 21

தோற்றுப் போன நாடுகளின் பட்டியலில் 29வது இடத்தில் இலங்கை




உலகில் தோற்றுப் போன நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 29வது இடம் வழங்கப்பட்டுள்ளது.

கௌரவமான வெளிநாட்டு கொள்கைகளுக்கான சஞ்சிகை இந்த பட்டியலை வெளியிட்டுள்ளதாக த டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் சூடான் முதலாவது இடத்தில் உள்ளது.

இதற்கிடையில் இந்த பட்டியலை வெளியிட்டுள்ள சஞ்சிகை, இந்தியா தமது அண்டைய நாடுகளை பாதுகாக்க தவறியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், மியன்மார், பங்களாதேஸ், பூட்டான், இலங்கை போன்ற நாடுகள் இந்த பட்டியலில் முதல் 50 நாடுகளுள் இடம்பெற்றுள்ளன.

No comments:

Post a Comment