6 வேலை நாட்களுக்குள் கடவுச்சீட்டு
வவுனியாவில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய காரியாலயமொன்றை விரைவில் ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பணிப்புரையின் கீழ் இத்திணைக்களத்தின் பிராந்திய காரியாலயம் திறக்கப்படவுள்ளது.
வடபகுதி மக்கள் இங்கு சகல தேவையான ஆவணங்களின் பிரதிகளுடன் கடவுச்சீட்டுக்கான விண்ணப்பத்தை 2500ரூபா கட்டணத்துடன் செலுத்திவிட்டால் அதனை 6 வேலை நாட்களுக்குள் பரிசீலனை செய்து திணைக்களத்தின் அதிகாரிகள் புது கடவுச்சீட்டுகளை சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு வழங்குவர் என்று குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் சூலானந்த பெரேரா கூறினார்.
வடபகுதியில் உள்ள மக்கள் கடவுச்சீட்டுகளை பெறுவதற்காக கொழும்பிற்கு வந்து பலநாட்கள் தங்கியிருந்து பணத்தையும்இ நேரத்தையும் வீணாக்குவதை தவிர்ப்பதற்காகவே இந்நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது
No comments:
Post a Comment