கொழும்பு தெஹிவளை கல்போவில பாத்தியா மாவத்தையில் அமைந்துள்ள மஸ்ஜித் ஒன்றுக்குள் பெளத்த மதகுருமார்கள் சிலர் நுழைந்து அதனை மூடிவிடுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப் பட்டதால் மஸ்ஜித் நேற்று ஞாயிற்று கிழமையுடன் ஜமாஅத் தொழுகைகள் நடைபெறாது மூடப்பட்டுள்ளதாகவும் அந்த மஸ்ஜிதின் தினமும் தொழுகையில் ஈடுபட்டுவந்த நபர் முஹமத் lankamuslim.org க்கு தெரிவித்தார்.
மேலும் அவர் வழங்கிய தகவலில் பாத்தியா மாவத்தையில் அமைந்துள்ள அல் பௌசுல் அக்பர் மதரஸா என்ற மாலை நேர சிறுவர் அரபு பாடசாலை ஒரு வருடத்துக்கு முன்னர் அதன் பின் பகுதியில் நிர்மானிக்கப்பட்ட மஸ்ஜித் ஒன்றுடன் மஸ்ஜித்தாக இயங்கிவந்ததாகவும் அந்த மாவத்தையில் மஸ்ஜித்துக்கு சற்று தொலைவில் வசிக்கும் ஒரு பெரும்பான்மை இனத்தவர் மஸ்ஜிதின் முன்பாக வாகங்கள் விடுவதால் தம்மை சிரமத்துக்கு உள்ளாக்குவதாக முறையிட்டுவந்துள்ளார் விரிவாக
மஸ்ஜித் நிர்வாகத்தினரும் மஸ்ஜிதில் தொழுகைக்கு வருபவர்கள் வாகனங்களை போக்குவரத்துக்கு இடஞ்சல் ஏற்படாதவாறு நிறுத்துமாறு அறிவித்தும் வந்துள்ளனர் இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஜமாஅத் தொழுகை நேரத்தில் மஸ்ஜிதுல் நுழைந்த பெளத்த தேரர்கள் சிலர் மஸ்ஜிதை மூடுமாறும் இது மதரஸா பள்ளியல்ல இங்கு தொழுகை நடத்தக் கூடாது என்று மிரட்டியுள்ளனர் இதை தொடர்ந்து இரண்டு தடவைகள் வரை மஸ்ஜித் நிர்வாகத்துக்கும் தேரர்களும் இடையில் போச்சு இடம்பெற்றபோதும் நேற்று மஸ்ஜிதுக்கு எதிரான ஆர்பாட்ட ஊர்வலம் ஒன்று தேரர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டது இதை தோடர்ந்து மஸ்ஜித் நேற்றுடன் மூடப்பட்டுள்ளது .
குறித்த மஸ்ஜித் அமைத்துள்ள பிரதேசத்தில் ஜனாதிபதி ஆலோசகரான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் ஹாஜியார் அவர்களின் வீடு ஒன்று அமைந்துள்ளதாகவும் அவர் இந்த விடயத்தில் தலையிட்டு மஸ்ஜித் மீண்டும் இயங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் மட்டுமல்ல அரசு தரப்பிலும் எதிர் தரப்பிலும் இருக்கும் முஸ்லிம் அரசியல் வாதிகள் இந்த விடயம் தொடர்பில் உடனடி கவனம் எடுக்கவேண்டும் என்றும் தான் உட்பட அந்த பிரதேச முஸ்லிம்கள் எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் lankamuslim.org க்கு தெரிவித்தார்
No comments:
Post a Comment