Sunday, June 26

ஐ.நா. மனித உரிமைக்கவுன்சிலின் அடுத்த அமர்வில் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை?- தமிழ்வின்


ஐ.நா. மனித உரிமைக்கவுன்சிலின் அடுத்த அமர்வில் இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம் என்று தெரிய வருகின்றது.
அண்மையில் நிறைவுற்ற ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடையை பிரேரிப்பதற்கு பல நாடுகள் தயாராக இருந்த போதும், பல்வேறு காரணங்களால் அதனை நிறைவேற்றிக் கொள்ள முடியாது போயுள்ளது.


அதன் காரணமாக எதிர்வரும் செப்டம்பரில் நடைபெறவுள்ள அடுத்த மனித உரிமை அமர்வில் குறித்த பிரேரணையை முன்வைப்பதற்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அதற்கு ஆதரவளிக்கும் வகையில் எதிர்வரும் செப்டம்பரில் மனித உரிமைக் கவுன்சிலின் ஆரம்பமானவுடன் சனல்4 தொலைக்காட்சி இலங்கை தொடர்பான தனது "இலங்கையின் படுகொலைக்களம்" காணொளியை மீண்டுமொரு தடவை ஒளிபரப்பத் தீர்மானித்துள்ளது.
இதற்கிடையே இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணையொன்றுக்கான பிரேரணையை செப்டம்பரில் நடைபெறும் மனித உரிமைக் கவுன்சி்ல் அமர்வின் போது அமெரிக்கா முன்மொழியவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment