ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றமொன்றில் தொடரப்பட்ட வழக்குக்கு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ள இந்நிலையி்ல் அந்நீதிமன்றுக்கு பதிலளிக்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாகத் தெரியவருகிறது.
முதலில் அந்நீதிமன்ற நடவடிக்கைக்குப் பதிலளிக்கப் போவதில்லை எனத் தெரிவித்திருந்த அரசாங்கம் இப்போது அதற்குப் பதிலளிக்க முடிவு செய்துள்ளது.
வழக்குத் தொடர்பாக ஜனாதிபதி நல விடயங்களைக் கவனித்துக் கொள்வதற்கு அமெரிக்காவைச் சேர்ந்த சட்ட நிபுணர் ஒருவரை நியமிப்பதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பாக நீதி அமைச்சின் செயலர் சுகத கம்லத் தகவல் வெளியிடுகையில், சிறிலங்கா அதிபருக்கு அழைப்பாணை விடுத்துள்ள அமெரிக்க நீதிமன்றில் ஜனாதிபதி நல விடயங்களைக் கவனித்துக் கொள்வதற்கு சட்டநிபுணர் ஒருவரை சட்டமா அதிபர் திணைக்களம் பணிக்கு அமர்த்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கைப் படையினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களால் அமெரிக்க நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நட்டஈடு கோரும் மூன்று வழக்குகளிலேயே சிறிலங்கா அதிபருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment