தூத்துக்குடி - கொழும்பு இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து இந்திய கப்பல்
போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜீ.கே வாசனால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
பயணிகள் 121 பேர் மற்றும் நல்லெண்ண தூதுவர்கள் 80 பேர் என மொத்தம் 201 பேர் கொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்தனர்.
1980 ஆம் ஆண்டுக்குப் பிறகு நிறுத்திவைக்கப்பட்டிருந்த கப்பல் போக்குவரத்து இப்போது மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
வழமையாக இராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்குத்தான் பயணிகள் கப்பல் செல்லும். ஆனால் இப்போது தூத்துக்குடியிலிருந்து கொழும்பிற்கு இயக்கப்படுகிறது.
No comments:
Post a Comment