ஏகாதிபத்தியவாதிகளினால் அரபு நாடுகள் மீது மேற்கொண்டு வரும் மனிதாபிமானமற்ற படுகொலைகளுக்கு எதிராகவும், அந்நாடுகளின் வளங்களையும், பொருளாதார சுரண்டல்களையும் தடுக்கும் வகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் ஜூம்ஆ பிரார்த்தனைக்குப் பின்னர் பிற்பகல் 1.30 மணிக்கு மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி மேல்மாகாண ஆளுநர் அல்ஹாஜ் அலவி மெளலான தலைமையில் நடைபெறவுள்ளது.
அமெரிக்கா உலகத்தின் பொலிஸ்காரர் என்ற மமதையில் அப்பாவி அரபு நாடுகளை செய்த கொடுமைகளால் இன்று ஈராக் ஒரு யுத்தகளமாக மாறியிருக்கிறது. மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளில் அமைதியின்மைகளும், வன்முறைகளும் தலைதூக்கியிருக்கின்றது.
சதாம் ஹ¥சைனின் மகன்மாரை படுகொலை செய்து இறுதியில் சதாம் ஹசைனை தூக்கிட்டதைப் போன்று யதார்த்தவாதியான லிபியத் தலைவர் கடாபியை அழித்துவிடுவதற்கு அமெரிக்கா இன்று சதித்திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவின் தான்தோன்றித்தனமான முஸ்லிம் உலகை அழிக்கும் சதித்திட்டத்தைப் பார்த்து உலக நாடுகள் இனிமேலும் கைக்கட்டி மெளனம் சாதிக்கக் கூடாது. அவ்விதம் செய்தால் உலகில் ஜனநாயகமும் நீதி நியாயமும் அமெரிக்காவினால் குழிதோண்டிப் புதைக்கப்படும் என்று தெரிவித்தார்.
இலங்கை மக்களும் இனிமேலும் மெளனம் சாதித்தால் அமெரிக்க ஆக்கிரமிப்பு எங்கள் நாட்டையும் விட்டுவைக்கப் போவதில்லை என்று எச்சரிக்கை விடுத்தார். எனவே வெள்ளிக்கிழமை நடைபெறும் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ள வேண்டுமென மேல் மாகாண ஆளுநர் வேண்டுகோள் விடுத்தார். ஆளுநர் பணிமனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேல் மாகாண ஆளுநர் இதனைத் தெரிவித்தார்.
சர்வ மதத்தலைவர்களின் அனுசரணையின் கீழ் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இன, மத, கட்சி பேதமின்றி சகலரையும் கலந்து கொள்ளுமாறு தேசிய ஐக்கியத்திற்கான தலைவரும், சப்ரகமுவ பல்கலைக்கழக வேந்தர் சங்கைக்குரிய கும்புறுகமுவ வஜிர நாயக்கத் தேரர் அழைப்பு விடுத்தார்.
ஐக்கிய நாடுகள் சபை சமாதானத்திற்கு உருவாக்கப்பட்ட அமைப்பாகும். எனினும் அமெரிக்காவின் கைம்பொம்மையாக ஐக்கிய நாடுகள் செயற்படுவதானது ஏகாதிபத்தியவாதிகளுக்கு துணையாக இருப்பது வேதனையளிக்கிறது. சமாதானத்தை ஏற்படுத்த வேண்டிய இவர்கள் உலக நாடுகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து அந்நாடுகளின் சொத்துக்களையும், சிறுபிள்ளைகளையும் கொன்று குவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான், ஈராக், எகிப்து, மற்றும் லிபியா நாடுகள் மீது மேற்கொண்டுவரும் மனிதாபிமானற்ற படுகொலைகளை நிறுத்த வேண்டும். அமெரிக்கா மேற்கொண்டு வரும் முஸ்லிம் நாடுகளை அழிக்கும் இனவிரோத செயற்பாட்டுக்கு எதிராக நாம் கிளர்ந்தெழ வேண்டுமென சங்கைக்குரிய கும்புறுகமுவ வஜிர நாயக்கத் தேரர் கேட்டுக் கொண்டார்.
ஹசன் மெளலானா உரையாற்றும் போது, இன்று மத்தியகிழக்கிலுள்ள முஸ்லிம் நாடுகள் ஒற்றுமையிழந்து காணப்படு கின்றமை அமெரிக்காவின் ஏகாதிபத்தியம் தலைதூக்க காரணமாக இருக்கின்றது. அரபு நாடுகள் ஒன்றுபடும் போது அமெரிக்காவின் அகங்காரத்தை முற்றாக ஒழிக்க முடியும். அத்துடன் உலக பொலிஸ்காரன் என்ற கெளரவத்தை ஒடுக்க முடியும்.
அமெரிக்கா தற்போது லிபியாவில் மேற்கொண்டு வரும் இனப்படுகொலையை முற்றாக எதிர்க்க வேண்டும். இன்று லிபியா நாளை இலங்கையாக கூட இருக்கலாம். எனவே இவர்களின் அடாவடித்தனத்திற்கு எதிராக முஸ்லிம்கள் மாத்திரமின்றி அனைவரும் இன, மத, கட்சி பாராமல் கலந்து கொள்ள வேண்டும்
No comments:
Post a Comment