Tuesday, June 7

சாதாரண தரம் கூட சித்தியடையாமல் 20 வருடம் சிகிச்சை அளித்த வைத்தியர் கண்டியில் கைது


June 7, 2011  01:51 pm
சாதாரண தரம் கூட சித்தியடையவில்லை: 20 வருடம் சிகிச்சை அளித்த வைத்தியர் கண்டியில் கைதுBookmark and Share
தகுதியுடைய வைத்தியர் பட்டத்தை போலியாகப் பெற்று கண்டி நகரில் வைத்திய மத்திய நிலையமொன்றை நடத்திவந்த போலி வைத்தியர் ஒருவர் கண்டி குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி நகரில் பல வருட காலங்களாக குறித்த நபர் வைத்திய மத்திய நிலையத்தை நடத்தி வந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த வைத்திய நிலையம் முற்றுகையிடப்பட்ட போது அங்கு போலியான வைத்தியப் பட்டம் பெற்ற புகைப்படம் தொங்கவிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட வைத்தியர் சுமார் 20 வருட காலங்களாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததோடு சிகிச்சை அளித்ததற்கான வைத்திய சான்றிதழையும் வழங்கி வந்துள்ளார்.

எனினும் இவர் இலங்கை வைத்தியர் சபையிலோ அல்லது தனியார் வைத்திய சபையிலோ பதிவு செய்யப்பட்டவர் அல்ல என தெரியவந்துள்ளது.

விசாரணைகளின் பின்னர், குறித்த போலி வைத்தியர் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில்கூட சித்தியடைவில்லை என தெரியவந்துள்ளது.

குறித்த போலி வைத்தியர் பலருக்கு சிகிச்சை அளித்துள்ளதோடு சத்திரசிகிச்சையும் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சுற்றிவளைப்பின் போது வைத்திய உபகரணங்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளதுடன், வைத்தியருக்கு உதவியாகப் பணிபுரிந்த இரு யுவதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment