June 7, 2011 11:37 am
இலங்கையைச் சேர்ந்த முன்னாள் பூசகர் ஒருவர் அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படலாம் என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
பிரேம்காந்தன் ராஜரட்ணம் சர்மா எனும் குறித்த பூசகர் கெறும் டவுன்ஸ் என்ற பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலயத்தில் பணிபுரியும் போது, ஜூலை 12ம் திகதி 2004ம் ஆண்டு 23 வயதுடைய பெண்ணொருவரை தவறான முறையில் அணுக முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
கடந்த புதன்கிழமை குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பெண்ணொருவர் ஆலயம் சென்றிருந்த போது பூசகரிடம் ஆசீர்வாதம் பெற முயற்சித்ததாகவும் அதன்போது பூசகர் பெண்ணை தனது பிரிவுக்கு வருமாறு அழைத்ததாகவும் பொலிஸ் அதிகாரி மார்டீன், பிரான்ங்ஸ்டன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பெண் அவருடன் சென்று இராசிபலன்கள் பாரத்துவிட்டு ஆசீர்வாதம் பெற சென்ற போது பூசகர் பெண்ணை தவறான விதத்தில் தொட்டுள்ளார்.
இதேவேளை இவர் மீது இன்னுமொரு முறைப்பாட்டை மற்றுமொரு பெண் ஏப்ரல் 2009ம் ஆண்டு பொலிஸில் பதிவு செய்துள்ளார்.
அப்பெண்ணுக்கும் முன்பு நடந்த சம்பவம் போன்றே நடந்ததாகவும் ஆனால் குறித்த பெண்ணை அவர் முத்தமிட முயற்சித்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பூசகரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு முதல் குற்றத்துக்காக 18 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டாண்டு கடந்து மற்றுமொரு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment