Monday, June 27

வீடு பற்றும் போது பீடிக்கு நெருப்பு கேட்ட கதை :கோத்தபாயவின் மகனுக்கு திருமணம்! இரண்டு கொள்கலன்களில் ரோஜாப்பூ


[ திங்கட்கிழமை, 27 யூன் 2011, 02:27.30 AM GMT ]
இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் நந்தசேன கோத்தபாய ராஜபக்சவின் மகனது திருமணம் எதிர்வரும் 30 ம் திகதி நடைபெறவுள்ளது. இந்தத் திருமணத்துக்காக நெதர்லாந்தில் இருந்து பாரிய இரண்டு கொள்கலன்களில் ரோஜாப்பூக்கள் தருவிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இந்த திருமண நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இந்த திருமணத்தில் உயர் விருந்தினர்கள் பங்கேற்கவுள்ளமையால் தற்போது முதலே ஹோட்டல் பிரதேசத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன் திருமண நிகழ்வு இடம்பெறும் போது ஹோட்டலில் இடம்பெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்துச்செய்யப்பட்டுள்ளன.
இந்தத் திருமணத்துக்காக நெதர்லாந்தில் இருந்து பாரிய இரண்டு கொள்கலன்களில் ரோஜாப்பூக்கள் தருவிக்கப்பட்டுள்ளன.
ஆனால் இலங்கையின் விவசாய சட்டத்தின்கீழ் அனுமதியின்றி பூக்களை இறக்குமதி செய்யமுடியாது.
எனினும் கோத்தபாயவின் மகனது திருமணத்துக்கான இந்த ரோஜாப்பூக்கள் முன் அனுமதியின்றியே தருவிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை இந்தத் திருமணம் இலங்கை வரலாற்றில் சிறப்பான திருமணமாக அமையவேண்டும் என்று கோத்தபாய ராஜபக்ச தமது உதவியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment