தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 24ம் திகதி வெளியிடப்படவுள்ளது.
இதன்படி எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் மூன்று வார காலத்திற்குள் மாணவர்கள் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியுமென தேசிய கல்வியியற் கல்லூரி ஆணையாளர் திஸ்ஸஹேவா விதாரண
தெரிவித்துள்ளார்.
கடந்த 2010 ஆம் வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் கல்வியியற் கல்லூரி அனுமதிக்கான விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும்.
இம்முறை 3200 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ள அதேவேளை இதில் ஆரம்பபிரிவு ஆசிரியர் பயிற்சி நெறிக்கே கூடுதலான மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை புதிய ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் திஸ்ஸஹேவா விதாரண மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment