தெற்கு கடுகதி வீதியில் பயணிகள் போக்குவரத்துக்காக இ.போ.ச பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவது மேலும் இரு வாரங்களினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, இ.போ.ச தெரிவிக்கின்றது. இ.போ.ச தலைவர் எம்.சி. பந்துசேன தகவல் தருகையில், இதற்காக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ள சொகுசு பஸ் சேவைக்கென தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு விஷேட பயிற்சிகள் வழங்கப்படுவதனால், இச்சேவை தாமதமடைந்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இன்னமும் வெளியிடப்படாத நிலையில், கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில பத்திரிகை ஒன்றில் அதன் முக்கிய பரிந்துரைகள் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன.பலமான ஆயுதங்கள் தரித்த தீவிரவாதக் குழுவின் பிடியில் இருந்து பொதுமக்களை மீட்பதற்கு நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கம் கேட்டிருக்க வேண்டியதில்லை. அவ்வாறு போர் நடவடிக்கையை நிறுத்துவது தீவிரவாதிகள் மூர்க்கம் பெறுவதற்கு மட்டுமே வழிவகுக்கும்.













இலங்கையில் இருக்கின்ற அரபுக் கல்லூரிகளில் பணியாற்றுகின்ற விரிவுரையாளர்களுக்கு வீஷேட பயிற்சி வழங்குவதற்காக கல்லூரி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் முன்வைத்த கோரிக்கைக்கு புத்தசாசன மத விவகார அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது.













(கொழும்பு செய்தியாளர்)



இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இணைய உள்ளடக்கத்தை இலங்கையின் வேண்டுதலின் பேரில் கூகிள் நீக்கியுள்ளது. இப்படியான கோரிக்கையொன்று விடுக்கப்பட்டதாகவும், அதற்கு தாம் இணங்கியதாகவும் கூகிள் அறிவித்துள்ளது. வேறு தொழில்நுட்ப, தொடர்பாடல் நிறுவனங்களைப் போல், சிரமமாக இலங்கை அரசு காரியாலயங்களிலிருந்தும் உலகிலுள்ள நீதிமன்றங்களிலிருந்தும் தமது இணையத்திலிருந்து உள்ளடங்கங்களை நீக்குமாறு கோரிக்கைகள் விடப்படுகின்றன. சில உள்ளடக்கங்கள் அவதூறு ஏற்படுத்துவதாகவும், சில உள்நாட்டு சட்டங்களை மீறுவதாகவும், சில பாலியல் மற்றும் வெறுப்புணர்ச்சியை வெளிப்படுத்துவதாலும் உள்ளடக்கங்கள் நீக்கப்படுகின்றன. நாட்டுக்கு நாடு இச்சட்ட விதிகள் வேறுபட்டு காணப்படுகின்றன. இலங்கை அரசின் கோரிக்கையின் பேரில் கூகிள் தமது உள்ளடக்கங்களை நீக்கினால், கூகிள் இலங்கை அரசியல் பிரசார பகுதிகளையும் நீக்க வேண்டுமெனவும், அவை தமிழர்களைப் பாதிப்பதாகவும் தமிழ் ஆர்வலர் ஒருவர் கூறினார்.

போரதனைப் பல்கலைக்கழகத்தில் பெண் மாணவிகள் மீது அரை நிர்வாண பகிடி வதை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.. இதன்போது முதலாம் ஆண்டு மாணவிகளை இரண்டாம் ஆண்டு சக மாணவிகள் இவ்வாறு பகிடி வதைக்கு உள்ளாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.