Monday, November 21

தபால் மாஅதிபரை பதவி நீக்க அமைச்சர் இணக்கம்: பணிப் பகிஷ்கரிப்பு முடிவு!


Post_Office(கொழும்பு செய்தியாளர்)
தபால்மா அதிபர் எம்.கே.பீ. திசாநாயக்கவை அப்பதவியிலிருந்து நீக்குவதாக தபால் தொலைத தொடர்புகள் அமைச்சர் ஜீவன் குமாரங்க உறுதியளித்ததையடுத்து கடந்த எட்டு நாட்களாக மேற்கொண்டு வந்த பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை தபால் திணைக்கள ஊழியர்கள் முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

தபால்மா அதிபர் எம்.கே.பீ. திசாநாயக்க மீது ஊழல் மற்றும் அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தி, அவரை பதவி நீக்க வேண்டுமெனக் கோரி தபால் ஊழியர்கள் கடந்த திங்கட்கிழமை பகிஷ்கரிப்பை ஆரம்பித்திருந்தனர். இப்பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் காரணமாக 10 லட்சத்திற்கும் அதிகமான தபால்கள் விநியோகிக்கப்படாமல் தேங்கியிருந்தன.


இது தொடர்பாக தபால் திணைக்கள தொழிற் சங்கத் தலைவர்களுடன் இன்று பேச்சு நடாத்திய தபால் தொலைத் தொடர்புகள் அமைச்சர் ஜீவன் குமாரங்க, தபால்மா அதிபர் குற்றவாழியாக காணப்ட்டால் அவர் பதவியிலிருந்து நிச்சயம் நீக்கப்படுவார் என உறுதியளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பனிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை கைவிடுவதற்கு தபால் திணைக்கள தொழிற் சங்கத் தலைவர்கள் முன் வந்துள்ளனர்.

No comments:

Post a Comment