Friday, November 25

சரத் பொன்சேகா உண்ணாவிரதத்துக்கு முஸ்தீபு - சிறைத்தண்டனை அளித்த நீதிபதிக்கு பதவியுயர்வு

 
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிறைச்சாலைக்குள் உண்ணாவிரதப் போராட்டமொன்றுக்கு தயாராகி வருவதாக செய்திகள் கசிந்துள்ளன.
 
தனது நோய்க்குச் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை சிறைச்சாலை நிர்வாகம் மறுத்துள்ளமையைக் கண்டித்தே அவர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளார். நேற்று தொடக்கம் அவர் உண்ணாவிரதத்தில் குதிக்க முடிவு செய்திருந்தபோதும், சிறைச்சாலை அதிகாரிகளின் வேண்டுகோள் காரணமாக அதனைப் பின்போட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

ஆயினும் எதிர்வரும் நாட்களில் அவர் முன்னறிவிப்பின்றி உண்ணாவிரதப் போராட்டமொன்றில் குதிக்கும் சாத்தியம் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.
சரத் பொன்சேகாவிற்கு சிறைத்தண்டனை அளித்த நீதிபதிக்கு பதவியுயர்வு
சரத் பொன்சேகாவிற்கு மூன்று வருட சிறைத் தண்டனை அளித்த நீதிபதிக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பான வழக்கில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்தீர்ப்பை வழங்கிய நீதிபதி தீபாலி விஜேசுந்தரவின் புதல்வியின் திருமணத்திலும் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்தார்.
அவ்வாறான நிலையில் தற்போது உயர்நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய தீபாலி விஜேசுந்தரவை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி நியமித்துள்ளார். அதற்கான அங்கீகாரத்தைப் பெறும் பொருட்டு அந்த நியமனம் தொடர்பான விடயம் பாராளுமன்ற நிலையியற்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தனககு விதிக்கப்பட்டுள்ள தண்டனைக்கு எதிராக சரத் பொன்சேகா மேற்கொண்டுள்ள மேன்முறையீட்டு மனுவையும் தீபாலி விஜேசுந்தரவிடமே விசாரணைக்கு விட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

No comments:

Post a Comment