அண்மையில் நுகேகொடையில் உள்ள ‘பெசன் பக்’ வியாபார ஸ்தாபானம் சிலரினால்
தாக்குதலுக்கு இலக்கானது. இதனை சேதமாக்கியதில் சம்பந்தப்பட்டவர்களின் சிலரை
பொலிசார் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். இவ் வழக்கினை பெசன்
பக் உரிமையாளரிடம் வாபஸ்
பெறச் சொன்னதாக சில ஊடகங்களும், அரசியல்வாதிகளும் என் மீது பழி
சுமத்துகின்றனர். நான் அவ்வாறு செயல்படவில்லை என பிரதிமைச்சர் பைசர்
முஸ்தபா தெரிவித்தார்.
கடந்த ஞயிற்றுக்கிழமை (28)ம் திகதி மருதாணை
டவர் அரங்கில் வெல்லம்பிட்டிய அகதியத்துல் தாருல்சலாம் அகதியா பாடசாலை
மாணவர்களது பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு
உரையாற்றும்போதே முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சரும் ஐனாதிபதி
சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபா மேற்கண்டவாறு தெரவித்தார்.