Monday, April 29

அரசாங்கத்தினுள் இருந்த பிளவு வெளிச்சத்திற்கு வந்ததுவிட்டது - கஜந்த கருணாதிலக

அரசாங்கத்தினுள் இருந்த பிளவு வெளிச்சத்திற்கு வந்ததுவிட்டது - கஜந்த கருணாதிலக












அரசாங்கத்தினுள் பிளவு ஏற்பட்டுள்ளமை மின் கட்டண அதிகரிப்பின் மூலம் வெளிப்படையாக தெரியவந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

முன்னாள் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் ஒன்று கூறினால் தற்போதைய எரிசக்தி அமைச்சர் அதற்கு எதிர்மாறாக கூறுகிறார். இதன் மூலமாக அரசாங்கத்தின் நெருக்கடி நிலைமைகள் புலப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜந்த கருணாதிலக தெரிவித்தார்.

இன்று (29) கொழும்பில் இடம்பெற்ற ஊடயவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அரச நிறுவனங்களில் ஊழல், குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாகவும் கஜந்த கருணாதிலக சுட்டிக் காட்டினார்.

குறிப்பாக இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆகிய இரண்டும் மக்களுக்கு பெரும் சுமைகளாக அமைந்து விட்டன என அவர் கூறினார்

தனியார் துறை ஊழியர்கள் 85 வீதத்திற்கும் குறைவான சம்பளத்தையே பெறுவதாகவும், தனியார் துறை ஊழியர்களை அரசு பொருட்படுத்துவதில்லை எனவும் கஜந்த கருணாதிலக குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment